தமிழ் சினிமா

ஜெயம் ரவியின் அகிலன் படம் எப்படி இருக்கு

Agilan Movie பொன்னியின் செல்வன் திரை படத்துடைய மாபெரும் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் தற்போது
வெளியாகி இருக்கின்ற திரைப்படம் அகிலன்
இந்தப் படத்தை கல்யாண கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார் இவர் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து
பூலோகம் என்ற திரைப்படத்தை கொடுத்திருந்தார்.

ஜெயம் ரவி அவருக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருக்கிறார்
படத்திற்கு சாம் சி எஸ்  இசையமைத்திருக்கிறார் 

இந்தியன் 2 படம் சம்பந்தப்பட்ட அப்டேட்

ஏற்கனவே அகிலன் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளிவந்து நல்ல எதிர்பார்ப்பை ரசிகர் மத்தியில் உருவாக்கியிருந்தது

சர்வதேச அளவில் கடல் வழியாக பல விதமான சட்ட விரோத செயல்களை ஒரு கும்பல் தொடர்ச்சியாக செய்து வருகிறது.
அந்த கும்பலுக்கு சென்னை துறைமுகத்தில் ஒரே ஆளாக இருந்து பல வேலைகளை செய்பவர் ஹரிஷ் பெரடி.

ADVERTISEMENT

அவரின் அடியாளாக வேலை பார்க்கக் கூடியவர்தான் ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் ஹரிஷ் பெரடியை மீறி
அந்த சர்வதேச கும்பலின் தலைவனான தருண் அரோராவை சந்திக்க ஆசைப்படுகிறார். 

அந்த ஒரு கடத்தல்  தலைவனது கவனத்தை ஈர்த்து ஹரிஷ் பெரடி  இடத்தை கைப்பற்றுகிறார்.
ஜெயம் ரவி தனியாக கப்பலை வாங்கி அதன் மூலம் பொது சேவை செய்யவும் ஆசைப்படுகிறார்.
அதற்கு தடையாக பாதுகாப்பு அதிகாரி சிராக் ஜானி இருக்க தருண் அரோராவும்
ஜெயம் ரவிக்கும் சொந்தமான கப்பல் இயங்க விடாமல் தடுக்க அடுத்து என்ன நடக்கும் என்பதை படத்தின் மீதி கதை.

Agilan Movie – அகிலன்

கதைக்களத்தோடு சேர்த்து படத்தின் கதையும் சொல்லி இருந்தால்
இன்னும் நன்றாக இருந்திருக்கும் அதில் சில குளறுபடிகள் நடந்திருக்கிறது

படத்தின் ஆரம்ப முதல் கடைசி வரை நம்மால் கச்சிதமாக படத்தை ரசிக்க முடியவில்லை
படத்தின் கதையிலும் கதாபாத்திரத்திலும் அழுத்தம் இல்லாமல் இருப்பதே அதற்கு காரணம்.
ஆனால் படம் முழுவதையும் தன் தோளில் சுமந்து முடிந்தவரை காப்பாற்ற தொடர் முயற்சி மேற்கொள்கிறார் ஜெயம் ரவி

தான் ஒரு அடியாளாகவும் மட்டுமே இல்லாமல் தனது மூளையை பயன்படுத்தி எப்படி உயர்வது என
அடி மேல் அடி எடுத்து வைத்து அதிரடியாக மேல் ஏறுகிறார் ஜெயம் ரவி அதிரடி கை கொடுக்க
அளவுக்கு கதைக்களமும்  திரைக்கதையும் அகிலனுக்கு கை கொடுக்கவில்லை

ADVERTISEMENT

ஜெயம் ரவிக்கு இணையாக தொந்தரவு செய்யக்கூடிய துறைமுக பாதுகாப்பு அதிகாரியாக சிராஜ் சாணி நடித்திருக்கிறார்.
ஜெயம் ரவி கதை சொன்னாலும் நம்புகிறார். வில்லன் தருண் அகோரா சொன்னாலும் நம்புகிறார்.
அதனால் அவரது கதாபாத்திரம் கொஞ்சம் வலுவிழந்து காணப்படுகிறது.

ஜெயம் ரவியின் காதலியாக போலீஸ் அதிகாரியான பிரியா பவானி சங்கர் தன்னுடைய
காதலனுக்கு உறுதுணையாக இருக்கிறார் ஏதோ பெரிதாக செய்வார் என்று எதிர்பார்த்தால்
ஒரு சில இடங்களில் மட்டுமே வந்து போகிறார்

பிளாஷ்பேக் ஜெயம் ரவியின் அப்பா அவருக்கு ஜோடியாக தனியா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்
அதுவும் அழுத்தம் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான்

அகிலன் திரைப் படத்தைப் பொறுத்தவரை ஜெயம் ரவியின் நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது.
படத்தின் மொத்த சுமையும் தனியாளாகவே சுமந்திருக்கிறார்.
இருந்தும் அதற்கு தக்க பலன் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்
படத்தின் கதை கதாபாத்திரங்கள் அந்த அளவுக்கு ரசிக்கும்படி இல்லை

முதல் பாதியில் இருந்த கொஞ்சம் சுவாரஸ்யம் கூட இரண்டாம் பாதையில் இல்லாமல் போனது வேதனையான விஷயம் 

ADVERTISEMENT

படம் முழுவதும் கெட்டவனாகவும் கெட்ட வார்த்தைகளை அதிக உபயோகிக்கக்கூடிய நபராகவும் வலம் வரக்கூடிய
ஜெயம் ரவி திடீரென்று படம் முடியும் தருவாயில் நல்லவனாக மாறி பொது சேவை செய்கிறது ஏற்கனவே
நாம் தமிழ் சினிமாவில் பார்த்து பழக்கப்பட்ட பழைய கதை தான் கொஞ்சம் கதை களத்தை மாற்றி சொல்லி இருக்கின்றன 

படத்திற்கு சாம் சி எஸ் இசை அமைத்திருக்கிறார் பொதுவாக சாம் சி எஸ் ஒரு திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
என்றால் அந்தப் படத்தினுடைய பாடல்களை விட பின்னணி இசை என்பது
ரசிகர்களை கவரும் ஆனால் இந்த படத்தில் அதுவும் எடுபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT