தமிழ் சினிமா செய்திகள்

சீயான் 62 படத்தின் டைட்டில் டீசர் வெளியானது

Veera Dheera Sooran தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடியவர் நடிகர் சீயான் விக்ரம் அவருடைய நடிப்பில்
ஏற்கனவே இயக்குனர் கௌதம் வசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம்.

பல வருடங்களாக இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை படம் வெளியாகவில்லை 

இதனை தொடர்ந்து விக்ரம் மற்றும் ரஞ்சித் கூட்டணியில் தங்கலான் அந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாமே முடிந்து படத்தை காண போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் டப்பிங் பணிகள் என்று தொடர்ச்சியாக பின்னணி வேலைகள் எல்லாமே நடந்து வருகிறது.

என் படத்தை எப்போ ரிலீஸ் பண்ணனும்னு சொல்ல நீ யாரு விஷால்

இந்த படம் இந்த வருடம் வருகிற மே ஜூன் மாதங்களில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது
இதுவரை இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை

அடுத்தபடியாக விக்ரம் அவருடைய 62 ஆவது திரைப்படம் இந்த திரைப்படத்தை ஏற்கனவே தமிழ் சினிமாவில் சித்தா என்ற திரைப்படத்தை எடுத்து மிகப் பிரபலமான ஒரு இயக்குனர் அருண்குமார் அவருடைய இயக்கத்தில் தான் விக்ரம் அவருடைய
62 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார்.

ADVERTISEMENT

Veera Dheera Sooran Teaser – விக்ரம்

மேலும் இந்த படத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவலும் ஏற்கனவே வெளியாக இருக்கிறது எஸ் ஜே சூர்யா, சூரஜ், துஷாரா விஜயன்
ஆகியோர் இணைந்திருக்கின்றன இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வீடியோவில் வந்து நல்ல வர வெற்ப்பை பெற்றிருந்தது அதே வேளையில் 
நேற்று சீயான் விக்ரம் அவருடைய பிறந்தநாள் என்பதால் பட குழு படத்திற்கான தலைப்பை அறிவித்திருக்கின்றனர்.
ஒரு வீடியோவை வெளியிட்டு அந்த வகையில் விக்ரம் அவருடைய 62 வது திரைப்படத்திற்கு வீர தீர சூரன் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

வந்திருக்கின்ற வீடியோவில் சில விக்ரம் ஒரு மளிகை கடையில் வேலை பார்க்கக்கூடிய மளிகை கடை
வைத்திருக்கக் கூடிய ஒரு நபராக இருக்கிறார்

இருந்தாலும் அவருடைய கையில் மிகப்பெரிய ஒரு துப்பாக்கி இருப்பது போல் தான் வீடியோ வெளியாகியிருக்கிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சித்தா படத்தின் இயக்குனர துப்பாக்கி தூக்க வைத்து விட்டீர்கள்
என்று இணையதளமாக விமர்சனம் செய்து வருகிறார்.

அதேபோல் இந்த வீரதீர சூரன் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று பட குழு அறிவித்திருக்கின்றனர்
படம் பிடிப்பு வேலைகள் நடைபெற்ற வருகிறது.

ஆனால் படத்திற்கான முதல் பாகம் என்பது இதுவரை வெளியாகவில்லை படத்திற்கான இரண்டாம் பாகத்தை வெளியிட்டு விட்டு
அதன் பிறகு படத்திற்கான முதல் பாகத்தை வெளியிடப்பட குழு முடிவு செய்து இருக்கின்றனவாம்.

ADVERTISEMENT

எது எப்படியோ படம் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கிற வகையில் அமையும் பட்சத்தில் இந்த படம் மிகப்பெரிய
ஒரு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

Veera Dheera Sooran

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT