தமிழ் சினிமா செய்திகள்

என் படத்தை எப்போ ரிலீஸ் பண்ணனும்னு சொல்ல நீ யாரு விஷால்

Vishal தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வரக்கூடியவர் நடிகர் விஷால் தமிழ் சினிமாவில்
ரெட்ஜயன்ட் மூவிஸ் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது அதனுடைய
செயல்பாட்டை விஷால் விமர்சித்திருக்கிறார்.

நடிகர் விஷால் அவர்கள் நடித்திருக்க கூடிய ரத்தனம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக காத்திருக்கிறது.
இந்தப் படத்தை இயக்குனர் ஹரி கேட்கிறார் ஏற்கனவே விஷால் மற்றும் ஹரி  கூட்டணியில்
தாமிரபரணி பூஜை ஆகிய படங்களை இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்.

மூன்றாவது முறையாக இணைந்து ரத்தினம் என்ற திரைப்படத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.

தக் லைஃப் படத்திலிருந்து வெளியேறிய மற்றொரு நடிகர்

 பல்வேறு இடங்களில் தொடர்ந்து  ரத்தினம் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரக்கூடிய
நடிகர் விஷால் சில யூடுப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் அதில் தன்னுடைய
மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஷால் சொன்னது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் நபர் மீது மனஸ்தவம் எனக்கு உள்ளது
ஒரு படத்தை தள்ளிப் போ என சொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது.

ADVERTISEMENT

யாரும் சினிமாவை சொந்தம் கொண்டாட முடியாது தமிழ் சினிமா என் கையில இருக்குன்னு சொல்லி
யாரும் உறுபட்டதா சரித்திரம் கிடையாது.

என் தயாரிப்பாளர் வட்டி கட்டுபவர் சும்மா ஏசி  ரூமில் உட்கார்ந்து கொண்டு ஒரு போனை போட்டு தியேட்டர் போடு
படத்தை ரிலீஸ் பண்ணு வேற எந்த படமும் வரக்கூடாது அப்படின்னு சொல்ற தயாரிப்பாளர் கிடையாது.

வட்டிக்கு வாங்கி வேர்வை சிந்தி நாங்க எல்லாம் ரத்தம் சிந்தி ஒரு படத்தை எடுத்துக்கொண்டு வந்தா
தள்ளி  வாங்கணும்னு சொன்னா, யாரு உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.

Vishal – என் படத்தை சொல்ல நீ யாரு

தமிழ் சினிமாவ நீங்க தான் குத்தகைக்கு எடுத்திருக்கீங்களா ன்னு அங்குள்ள ஒரு நபர் கிட்ட கேட்டேன் அந்த நபர் உதயநிதியிடம் சேர்த்து விட்டதே நான்தான் அவரு இந்த மாதிரி விஷயங்களை பண்ணும் போது என்னால ஜீரணிக்கவே முடியல 

என்னுடைய தயாரிப்பாளர் 65 கோடி வரைக்கும் செலவு செஞ்சு மார்க் ஆண்டனி படத்திற்கு அவர் உதவி செய்திருக்கிறார்
அவர் செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் ரிலீஸ் பண்ணனும் அப்படின்னு
ஒரு மாசத்துக்கு முன்னாடியே எல்லா வேலைகளையுமே  செய்து முடித்தார்.

என்னுடைய தயாரிப்பாளரை இந்த தேதியில் படத்தை ரிலீஸ் பண்ண சொல்றதுக்கு நீ யாரு முதல்ல
அவரு காசு கடன் வாங்கி படம் பண்ணிருக்காரு. அவரு எப்ப ரிலீஸ் பண்ணுவாருன்னு அவருக்கு தெரியும்

நீங்க மட்டும் ரிலீஸ் பண்ணி நீங்க மட்டும் தான் சம்பாதிக்கணும் ஏதாச்சும் சட்டம் இருக்கா ஜாலியா
நீ ஏசி ரூம்ல உட்கார்ந்து சம்பாதிக்கிறத நாங்க வேடிக்கை பார்க்கணுமா.

ADVERTISEMENT

நான் இதை எதிர்த்ததால தான் படம் சொன்னா டைம்ல ரிலீஸ் ஆகி வெற்றி அடைந்தது அன்னைக்கு நான் சும்மா இருந்திருந்தேன்
அப்படின்னா படம் ரிலீஸ் ஆகி இருக்காது.

இப்போ ரத்தினம் படத்துக்கு கூட பிரச்சனை வரும் கண்டிப்பா வேணும்னு வந்து வேட்டு வைப்பாங்க இத சொல்ல
யாருக்குமே இங்க தைரியம் கிடையாது என விஷால் அந்த பேட்டியில் தன்னுடைய மனக்குமுறலை கொட்டி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT