தமிழ் சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் பாடல்

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் அவர் நடித்து வருகின்றார் திரைப்படம் பிரின்ஸ் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய post-production வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது

இந்த பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டின் நடிகை மரியா நடித்திருக்கிறார் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு டூரிஸ்ட் கைடாக நடித்திருக்கிறார் என்ற தகவலும் கிடைத்திருக்கிறது

அஜித்தின் 61வது படத்தின் அடுத்த ஷூட்டிங் எங்கு தெரியுமா?

ஏற்கனவே படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் படத்திற்கான செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்ற நிலையில் பிரின்ஸ் திரைப்படத்திற்கான முதல் பாடலைஇன்று செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்திருக்கிறது

பிரின்ஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது  பிரின்ஸ் திரைப்படத்திற்கான முதல் பாடல் BimbilikiPilaapiSong பிம்பிளிக்கி பிளாப்பி என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை கிடைத்து வருகின்றது

ADVERTISEMENT

இந்த ஒரு பாடலை அனிருத் பாடியிருக்கிறார் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் இணைந்தால் கண்டிப்பாக அந்த BimbilikiPilaapiSong பாடல் மிகப்பெரிய ஒரே வெற்றி அடையும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்ற நிலையில் இந்த பாடலுக்கும் தற்போது நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது  

இந்த  நிலையில் பிரின்ஸ் திரைப்படத்தை வருகிற தீபாவளி திருநாள் ஸ்பெஷலாக படக்குழு வெளியிட முடிவு செய்திருக்கின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT