தமிழ் சினிமா செய்திகள்

அரசியலுக்கு வர போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்

Vishal தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் வரக்கூடியவர் நடிகர் விஷால் 

நடிகர் விஷால் அவர்கள் நடித்திருக்க கூடிய ரத்தனம் திரைப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி ரிலீசாக காத்திருக்கிறது
இந்தப் படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருக்கிறார்

ஏற்கனவே விஷால் மற்றும் ஹரி  கூட்டணியில் தாமிரபரணி பூஜை ஆகிய படங்களை இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்
மூன்றாவது முறையாக இணைந்து ரத்தினம் என்ற திரைப்படத்தில் பணியாற்றி இருக்கின்றனர்.

வேட்டையன் திரைப்படம் கதாபாத்திரம் பற்றி கூறிய பகத் பாசில்

 பல்வேறு இடங்களில் தொடர்ந்து  ரத்தினம் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வரக்கூடிய நடிகர் விஷால்
அப்போதுதான் சில முக்கிய தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.

விஷால் அவரைப் பொறுத்தவரை தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.
ஆதரவற்ற வசதியற்ற குழந்தைகளை படிக்க வைப்பது விவசாயிகளுக்கு உதவி செய்வது எனத் தொடர்ந்து
பல சமூக சேவைகளில் ஈடுபட்டு இருக்கிறார். தெருவோரத்தில் திரியக்கூடிய நாய்களுக்கும் அவர் தொடர்ச்சியாக
ஆதரவும் உணவும் அளித்து வருகிறார்.

ADVERTISEMENT

Vishal – அரசியலுக்கு வரும் விஷால்

அண்மையில் தான் நடிகர் தளபதி விஜய் அவர்கள் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்திருக்கிறார்.
இவர் அடுத்த சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதே வேலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வரக்கூடிய நடிகர் விஷால்

அண்மையில் தனது மக்கள் நல இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார்.
அதில் வித்தியாசம் விவேகம் விடாமுயற்சி என்று அஜித் படத்தின் வசனங்கள் அதிகம் இடம் பெற்று இருந்தது.

மேலும் இவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் எதிர்காலத்தில் இயற்கை வேறு மாதிரியான
முடிவுகள் வைத்திருந்தால் மக்கள் பணியாற்றவும் தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்திருந்த நிலையில்

மக்களை இனி ஏமாற்ற முடியாது அதேபோல் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடுவேன்
அந்த தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியில் இருக்கும் அழகான அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்வதற்காக
நிறைய நல்லவர்கள் இருப்பார்கள் அவர்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம் நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும்.

கண்டிப்பாக 2026 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவேன் என்றும் விஷால் தெரிவித்திருந்தார் நடிகர் விஷால்
அரசியல் வருகையை அறிவித்திருப்பதால் அவர் விஜய்க்கு போட்டியாக அரசியல் களத்தில் களமிறங்குகிறாரா
என்ற கேள்வி ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT