தமிழ் சினிமா

யானை திரைப்படத்தின் விமர்சனம்

Yaanai அருண் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் யானை இந்த ஒரு படத்தில் அருண்விஜய் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார் மேலும் ராமச்சந்திர ராஜா சமுத்திரகனி ராஜேஷ் ராதிகா சரத்குமார் ஐஸ்வர்யா அம்மு அபிராமி யோகிபாபு புகழ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கின்றனர் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார் இந்தப்படத்தின் தொகுப்பாளராக அந்தோணி இணைந்திருக்கிறார்

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருக்கிறார் இந்த படத்தை திரும்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது இந்த படத்தை தமிழகம் முழுக்க கேகேஆர் சினிமாஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது இந்த திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருந்தது இந்த யானை திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை தற்போது பார்த்துவிடலாம்

Hari

வெகுநாட்களுக்கு பிறகு இயக்குனர் ஹரியின் திரைப்படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக சாமி ஸ்கொயர் திரைப்படம் வெளியாகி இருந்தது அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஹரி அருவா என்ற திரைப்படத்தை இயக்க இருந்தார் ஒரு சில பிரச்சினை காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டது இதனால் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை இயக்குனர் ஹரி வெற்றித் திரைப்படமாக இயக்குவார் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது அந்த எதிர்பார்ப்பும் தற்போது பூர்த்தி ஆகி இருக்கிறது என்பதுதான் உண்மை hari Yaanai

யானை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கக்கூடிய அருண் விஜய் படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார் அண்ணன் தங்கை பாசம் தாய் பாசம் என்று அனைத்திலும் பூந்து விளையாடி இருக்கிறார் அருண் விஜய் படத்தின் இயக்குனர் ஹரி அவருக்கான அந்த ஒருத்தன ஒரு கச்சிதமான கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு இந்தப் படத்தையும் கொண்டிருக்கின்றார்கள் நமக்கு அலுப்பை கொடுத்தாலும் படம் பார்க்கக்கூடிய ஃபேமிலி ஆடியன்ஸ் அவர்களை திருப்திபடுத்தும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது Yaanai

படத்துடைய கதை என்று பார்க்கும் பொழுது ஒரு மிகப்பெரிய முதல் இரண்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் ஒன்று கதாநாயகனின் குடும்பம் மற்றொன்று கதாநாயகனுக்கு வேண்டாத மற்றொரு குடும்பம் இதுதான் ஹரியின் கமர்சியல் படங்களில் முக்கியமாக இடம்பெறக்கூடிய கதைக்களம் அது இந்தப் படத்திலும் கையாண்டிருக்கிறார் ஹரி

ADVERTISEMENT

Motorola G82 5G மொபைல் போன் விவரம்

பொதுவாக பொதுவாக ஹரி அவருடைய திரைப்படங்கள் என்றாலே காதல் காமெடி சென்டிமெண்ட் குடும்ப பின்னணி என்று இருப்பது வழக்கம் அதே வழக்கம் போல திரைக்கதையை கையாண்டிருக்கிறார் ஹரி

Yaanai movie

ஊரில் வசிக்கக்கூடிய அருண்விஜய் அவருடைய குடும்பத்திற்கும் அவருடைய எதிரி குடும்பத்திற்கும் தீராத பகை இருந்து வருகிறது இதனால் எதிரி குடும்பத்தில் காரர்கள் நம் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களை எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக தன் குடும்பத்தை அன்பாகவும் பாசமாகவும் வழிநடத்தக் கூடிய ஒரு இளைய பிள்ளையாக வலம் வருகிறார் அருண் விஜய் என்னதான் அருண்விஜய் பலவிதமான கேரக்டர்களில் எடுத்து பண்ணி இருந்தாலும் அவர் வெற்றிகளை கொடுத்து இருந்தாலும் ஒரு கமர்சியல் திரைப்படத்தின் மிகப்பெரிய ஒரு வெற்றி நாயகனாக திகழ்ந்திருக்கிறார் அருண் விஜய்க்கு கமர்சியல் திரைப்படத்திற்கு தேவையான அத்தனை அம்சத்தையும் இந்த யானை படம் மூலம் மதம் கொண்ட யானையை வேட்டையாடி மகிழ்ந்திருக்கிறார் அருண் விஜய்

அருண் விஜய் அவருடைய தங்கை அம்மு அபிராமி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் இது நடிகர் சமுத்திரக்கனி அம்மு அபிராமி அவருக்கு பிடிக்கவில்லை இதனால் அம்மு அபிராமி அவரை எப்படியாவது கொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் ஏனென்றால் வேறு ஒரு ஜாதி மதம் மாறி திருமணம் செய்வதற்காக அதனை அண்ணனான அருண்விஜய் தடுக்கிறார் அதேபோல் அம்மு அபிராமி அவருடைய காதல் விவகாரம் அருண்விஜய் அவருக்கு தெரிந்தும்

அவர் குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்களுக்கு குறிப்பாக தந்தையான சமுத்திரக்கனிக்கு அவர் தெரிவிக்கவில்லை என்று காரணத்தினால் அவர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார் இதன் பிறகு என்ன நடக்கிறது எதிர் குடும்பத்தை எவ்வாறு அருண் விஜய் இது ஜெயித்தார் தன்னுடைய தங்கையை காப்பாற்றினாரா அப்பாவை சமாதானப் படுத்தினார் அருண்விஜய் என்பதுதான் படத்தின் மீதி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்

ADVERTISEMENT

Arun Vijay

அதேபோல் இந்த படத்தில் அனைவருடைய கதா பாத்திரங்களும் கச்சிதமாக தேவைக்கு ஏற்றது போல் வடிவமைக்கப்பட்டிருந்தது காமெடி பாடல்கள் சென்று விறுவிறுப்பை குறைத்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு சற்று ஆறுதலாக அருமையையும் சண்டைக்காட்சிகள் சென்டிமென்ட் சீன்களும் அமைந்திருந்தன படத்தில் அருண்விஜய் காளி வெங்கட் சமுத்திரக்கனி ராதிகா சரத்குமார் அம்மு அபிராமி பிரியா பவானி சங்கர் யோகி பாபுஉள்ளிட்டோர் நடிப்பு பிரமாதமாக அவர்களுடைய கதாபாத்திரங்கள் கட்சிதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது படத்தை பார்த்த ரசிகர்கள் மனதில் பாதிக்க வைக்கக் கூடிய ஒரு கதாபாத்திரமாகவே இருந்தது

அதேபோல் இந்த படத்தின் கேரக்டர் கதாபாத்திரம் எல்லாம் தாண்டி படத்தின் கோபிநாத் கேமராமேன் பங்கு என்பது அதிகம் படத்தை கிராமத்து பின்னணியில் குடும்பம் கதைக்களத்தை கேமரா மூலம் கையாண்ட விதம் உண்மையாகவே வியப்படைய வைக்கிறது குறிப்பாக சண்டைக்காட்சிகளில் அவர்கள் கேமராவில் உபயோகப்படுத்தும் ஒவ்வொரு சீனையும் எழுதி இருந்தார்கள் அதுவும் ஒரே ஷாட்டில் அதுதான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது

மேலும் இந்த திரைப்படம் ஒரு ஹரி திரைப்படம் என்றால் கண்டிப்பாக அது தங்களுக்கு பஞ்சமிருக்காது ஆயுதங்கள் இல்லாமல் ஹரி படமே இருக்காது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த படத்தில் ஆயுதங்கள் ஏந்தி தான் பொதுமக்களும் வில்லன்களும் ஹீரோவும் மணமகன் பிறந்த குழந்தைகளும் பெண்களும் தவிர அனைவரும் ஆயுதத்துடன் வருகின்றனர் பல இடங்களில் வெட்டுக்கள் கூத்துக்களும் கொலைகள் என்று படத்தின் விறுவிறுப்புக்கு ஆயுதங்களுக்கும் பஞ்சமில்லாமல் நகர்கிறது இது எல்லாம் இதுதான் ஹரி அவருடைய திரைப்படம் தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துக் காட்டுகிறது

Action Hero

முதன் முறையாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார் தன்னுடைய சொந்த மாமாவின் நடிப்பில் பல ஆண்டுகளாக இணைந்து பணியாற்றலாம் என்பது வெறும் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே இருந்தது இந்த யானை படம் மூலம்தான் அது நடந்திருக்கின்றது குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அருண்விஜய் அதகளம் செய்திருக்கிறார் பல முன்னணி நடிகர்கள் எவ்வாறு ஆக்சன் படங்களில் களமிறங்கி அசத்தி இருப்பார்களோ அதேபோல் அசத்தியிருக்கிறார்

அருண்விஜய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஹரி அவருடைய படங்களை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் சாமி திரைப்படம் ஆக இருக்கட்டும் சிங்கம் திரைப்படம் ஆக இருக்கட்டும் அந்த படங்கள் எப்படி ஆக்ஷன் காட்சிகள் கையாண்டு இருந்தாரோ இயக்குனர் ஹரி அதே அளவிற்கு இந்த திரைப்படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அருண் விஜய்யை வைத்து அதற்கு இணையாகவே அற்புதமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர் ஹரி

ADVERTISEMENT

நடிகர் அருண்விஜய் பொறுத்தவரை அண்ணன் அண்ணனுடைய குழந்தைகள் மீது பாசம் வைத்திருக்கக்கூடிய ஒரு பாசக்கார ராகவும் அதே வேளையில் பிரியா பவானி சங்கர் மீதான காதல் காட்சிகளும் எதிரிகளை பந்தாடி கூடிய ஆக்ஷன் காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார் அருண் விஜய் ஒரு முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கின்ற திரைப்படம் யானை என்று அடித்துச் சொல்லலாம்

படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர் அவருடைய கதாபாத்திரம் மிக முக்கியமானதாகக் கருதப் படுகின்ற சில சீன்கள் படத்தில் இருக்கின்றனர் மேலும் படத்தில் கிராம பின்னணியில் இருக்கக்கூடிய பெண்கள் எந்த மாதிரி இருப்பார்களோ அந்த கதாபாத்திரத்தை பிரியா பவானி சங்கர் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார் அவருக்கு கொடுத்த வேலையை மேலும் அருண் விஜய்க்கு உறுதுணையாக அவர் பேசக்கூடிய வசனங்களும் தியேட்டர்களில் பார்க்கக்கூடிய ஒரு வரவேற்பை பெற்று இருக்கின்றது

இந்த திரைப்படத்தில் ராமச்சந்திர ராஜா இரண்டு வேடங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் அவர் காண வில்லன் கேரக்டர் என்பது படத்தில் அந்தளவிற்கு கதாபாத்திரம் எழுதப்படவில்லை அந்த அளவிற்கு வலுவாக காட்டப்படவில்லை

அதைப்போல் இந்த திரைப்படத்தில் லாஜிக் மீறல் காட்சிகள் என்பது ஏகப்பட்ட காட்சிகள் இருக்கின்றது படம் பார்க்கக்கூடிய ரசிகர்கள் படம் பார்க்க கூடிய ஆர்வத்தில் இதையெல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் இயக்குனர் என்ற படத்தை இயக்கி இருப்பது போல் தான் தெரிகிறது படத்தின் லாஜிக் மீறல்கள் என்பது லாரியில் ஏற்ற கூடியவகையில் இருக்கின்றது

யானை திரைப்படத்தில் காமெடி என்பதே பல இடங்களில் நம்மை சிரிக்க வைத்தாலும் சில இடங்களில் நம்மை வெறுப்படைய வைக்கின்றது அந்த அளவிற்கு தான் படத்தில் காமெடி என்பது சில இடங்களில் நம் கழுத்தை அறுக்கிறது என்றுதான் சொல்லவேண்டும் பல இடங்களில் காமெடி என்பது சுத்தமாக ஒரு கூட ஆகவில்லை ஒரு சில இடங்களில் நாம் சிரித்து விட்டு பழி வாங்குவது போல் தான் காமெடி என்பதும் எழுதப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT
Yaanai Movie Review

பொதுவாக திரைப்படங்களில் காமெடி சீன்கள் வரும் இடங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும் வகையில் இருக்கவேண்டும் ஆனால் இந்த திரைப்படத்தில் முன்பு போன காட்சிக்கும் பின்பு வரக்கூடிய காட்சிக்கும் ஏன் இந்த இடத்தில் இந்த காட்சி வருகிறது என்று பார்க்கக் கூடிய ரசிகர்களையே சிந்திக்க வைக்கக்கூடிய அளவிற்கு சில இடங்களில் காமெடி காட்சிகள் வைத்தது ரசிகர்களை மேலும் சோர்வடையும் அவர்களையும் திரைக்கதை இப்படித்தான் இருக்குமோ என்று சிந்திக்கவும் வைத்திருக்கிறது

இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ் குமார் இசை என்றாலே படத்தில் வரக்கூடிய பின்னணி இசையும் பாடல்களும் குறிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் ஆனால் இந்தப் படத்தின் பின்னணி இசை மட்டுமே கொஞ்சம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது சண்டாளி பாடல் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் அதேபோல் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருந்தார்கள் என்றால் படத்திற்கு மேலும் பெரும் பலமாக அமைந்து இருக்கும்

அந்த ஒரு விஷயத்தில் கண்டிப்பாக இயக்குனரும் படத்தின் இசையமைப்பாளரும் இணைந்து செயல்பட்டு படத்திற்கான பாடலை கண்டிப்பாக பட்டிதொட்டியெங்கும் கொண்டாடும் வகையில் கொடுத்திருந்தார்கள் என்றால் படத்திற்கு மேலும் ஒரு வரவேற்பு கிடைக்க ஒரு நல்ல யுக்தி ஆக இருந்திருக்கும் அது எடுபடாமல் போனது படத்திற்கு மேலும் ஒரு குறைதான்

மொத்தத்தில் யானை திரைப்படத்தைப் பொறுத்தவரை குடும்ப ஆடியன்ஸ் என்று சொல்லக் கூடியவர்களை கண்டிப்பாக ரசிக்க வைக்கக்கூடிய படமாகவும் ஆக்சன் படங்களை விரும்பிப் பார்க்கக் கூடிய நபர்களை திருப்திப்படுத்தக் கூடிய படமாக படம் முழுவதிலும் ஆக்சன் என்பதற்கு பஞ்சமில்லாமல் ரணகளம் செய்திருக்கின்றனர் யானை குடும்பங்கள் கொண்டாடக்கூடிய திரைப்படமாகவும் ஆக்ஷன் கமர்சியல் குடும்ப சென்டிமென்ட் விரும்பிப் பார்க்கக் கூடிய ரசிகர்களுக்கு விரும்பும் படியான படமாக அமைந்திருக்கின்றது யானை பலம் என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT