தமிழ் சினிமா செய்திகள்

அஜித்தின் 62 ஆவது படம் தாமதம் ஏன் ?

AK 62 Movie நடிகர் அஜித் அவருடைய நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி இருந்தது
அந்த ஒரு திரைப்படம் வெளிவந்து தியேட்டரிலும் சரி ஓடிடி தளத்திலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
துணிவு திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளிவந்திருக்கிறது.

இந்த படம் உலக தரவரிசையில் ஐந்தாவது இடத்திலும் இந்திய தரவரிசையில் முதல் இடத்திலும் இருக்கிறது.
இந்த துணிவு திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம், கன்னடம்,
ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு நெட்ப்ளிக்சில் வெளியிடப்பட்டிருக்கிறது.

வாரிசு படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியீடு

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் மிக அதிகமாக பேசப்படக்கூடிய முக்கிய விஷயமாக அமைந்திருக்கிறது
அஜித்தின் 62 ஆவது படத்திற்கான படம்பிடிப்புகள் எப்போது இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற கேள்விகள் தான்.

அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது
பின்னர் திடீரென அவரை நீக்கிவிட்டு இயக்குனர் மகிழ்திருமேனி
அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குவார் என்று செய்திகள் வெளி வரத் தொடங்கின.

ஆனால் இந்த ஒரு தகவலை இதுவரை லைக்கா நிறுவனம் உறுதி செய்யவில்லை
அண்மையில் லண்டன் சென்றிருந்த நடிகர் அஜித் அங்கு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு
தற்போது மீண்டும் வீடு திரும்ப இருக்கிறார்
இந்த நிலையில் அஜித்தின் 62 ஆவது படம் குறித்து அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்று
அவருடைய ரசிகர்கள் எல்லோரும் பேராவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

AK 62 Movie

ஏகே 62 திரைப்படம் தாமதம் ஆவதற்கு முக்கிய காரணம் என்றும் சில தகவல்கள் வெளிவந்திருக்கின்றது
அது என்னவென்றால் ஏற்கனவே அஜித்தின் 62 ஆவது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று சொல்லப்பட்டது
அவரை நீக்கி விட்டு மகிழ்திருமேனியிடம் திரைக்கதைக்கு ஓகே செய்து இருக்கின்றனர்.

ஏற்கனவே மகிழ்ந்திரும் இனி கதை எழுதியிருக்கிறார் அந்த கதையை நடிகர் அஜித்துக்கு ஏற்றது போல்
சில மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கிறது அதனால் மகிழ்திருமேனிக்கு சில நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதனால் தற்போது திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து வருகிறாராம் மகிழ்திருமேனி 
நடிகர் அஜித்திற்கு ஏற்றது போல் சில பல மாற்றங்களை செய்யப்பட்டு வருகின்றனவாம்.

இந்த பிப்ரவரி மாத இறுதிக்குள் திரைக்கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியவை அனைத்தையும்
நிறைவு செய்தவுடன் மார்ச் மாதம் இரண்டாவது  வாரத்தில் இருந்து
அஜித்தின் 62 ஆவது படத்திற்கான ஷூட்டிங் நடத்த பட குழு திட்டமிட்டுள்ளது.

அஜித்தின் 62 வது திரைப்படத்திற்கு கடந்த சிவராத்திரி தினத்தன்று படத்திற்கான பூஜை ரகசியமாக போடப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது மேலும் பூஜை சம்பந்தப்பட்ட போட்டோஸ் வீடியோக்கள்
வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது இன்னும் சில தினங்களில்.

ADVERTISEMENT

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்று நடிகர்
நடிகைகள் தீர்வுகளும் ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை லைக்க ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது இந்த படத்திற்கு
அனிருத் இசை அமைக்க இருக்கிறார் என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது
ஆனாலும் படக்குழுவினரிடமிருந்து இறுதியான ஒரு தகவல் இதுவரை  வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT