தமிழ் சினிமா

தளபதி விஜய் வாரிசு பட விமர்சனம்

varisu movie தளபதி விஜய் அவருடைய நடிப்பில் உருவாகி இருக்கின்ற வாரிசு திரைப்படத்தை வம்சி படி பள்ளி இயக்கி இருக்கிறார் எந்த படத்தில் விஜய் அவருக்கு ஜோடியாக ராஜ் மிக்க மந்தனா நடித்திருக்கிறார்

மேலும் இந்தப் படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார் 

மிகுந்த எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்க கூடிய வாரிசு திரைப்படம் விஜய் அவருடைய முந்தைய படங்களில் பொதுவாக ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும்

இந்த முறை ஃபேமிலி சென்டிமென்ட் ஆக்சன் காட்சிகள் என்று முழுக்க ஒரு கமர்சியலை தேர்வு செய்திருக்கிறார் விஜய்

தெலுங்கு  இயக்குனரான வம்சி படிப்பள்ளி தெலுங்கில் இதற்கு முன்பு அவர் இயக்கி  தெலுங்கில் வந்து ஹிட்டான சில படங்கள் சாயலில் இந்த ஒரு வாரிசு திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் 

ADVERTISEMENT

தல அஜித் துணிவு பட விமர்சனம்

விஜய் முழுக்க முழுக்க அவருக்கு ஆக்சன் சீக்குவன்ஸ் அதிகம் இல்லை என்றாலும் அவருடைய எமோஷன் மற்றும் பர்பாமென்ஸ் கண்டிப்பாக ரசிகர்களை ரசிக்க வைக்க வாய்ப்பு உள்ளது 

அதேபோல் விஜய் இந்த படத்தில் மிக அற்புதமாக நடனம் ஆடி இருக்கிறார் கண்டிப்பாக விஜய் ரசிகர்களை ரசிக்க வைக்கிற அளவு அவர்களை கொண்டாட வைக்கின்ற வகையில் அவருடைய நடனம் அமைந்திருக்கின்றது 

Varisu Movie Review

மிகப்பெரிய ஒரு பிஸ்னஸ் மேன் ஆக இருக்கக்கூடிய சரத்குமார் அவருக்கு மூன்று மகன்கள் ஸ்ரீகாந்த் ஷாம் விஜய் தன்னுடைய வாழ்க்கை தன் விருப்பத்திற்கு வழா நினைத்த விஜய்

அதனால் அப்பாவுடன் சண்டை இட்டு வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் 

ADVERTISEMENT

அம்மா அப்பாவின் அற்புதாம் கல்யாணத்திற்காக வீட்டுக்கு வருகிறார் விஜய் தளபதி விஜய் அப்பாவானா சரத்குமார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதை அம்மா விஜயிடம் மட்டும் மறைமுகமாக சொல்கிறார் 

இதனால் அவர்களுடைய கம்பெனியை முழுவதுமாக பார்த்துக் கொள்ளும் பொறுப்பு தளபதிவிஜய்க்கு வருகிறது 

குடும்பத்தில் முக்கிய பொறுப்பு ஹிந்தி தளபதி விஜய்க்கு கொடுக்கப்பட்டதால் வீட்டை விட்டு அண்ணன்கள் ஆனா ஸ்ரீகாந்த் ஷாம் வெளியேறுகின்றனர் 

ஒரு பக்கம் குடும்பம் மறுபக்கம் பிசினஸ் எதிரியான பிரகாஷ்ராஜ் இந்த இரு பிரச்சனைகளையும் எப்படி தளபதி விஜய் சமாளிக்கிறார் என்பது தான் படத்தின் மீது கதை

குடும்பம் என்றால் என்ன குடும்பம் என்றால் குறை இருக்கத்தான் செய்யும் குடும்பத்தை எப்படி ஒற்றுமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என போராடுகிறார் தளபதி விஜய் 

ADVERTISEMENT

அண்ணன்களுக்கும் என் அப்பாவுக்கும் குடும்பம் என்றால் என்ன என்று புரிய வைக்க முயற்சி செய்கிறார் விஜய்

மிகவும் அழகான குடும்ப உறவுகளைப் பற்றிய கதை என்றாலும் ஒரு அழுத்தம் திருத்தமான  கதையாக எடுத்திருந்தால் கண்டிப்பா இந்த திரைப்படம் மனதில் பதியும்படி கொஞ்சம் ஆழமாக இருந்திருக்கும் 

ஆனால் உணர்வு பூர்வமாக கொடுக்காதது இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒரு பலவீனம் என்று சொல்லலாம்

சென்டிமென்ட் பல காட்சிகள் வரும்போது அதற்கான சந்தர்ப்பங்களில் இருந்தும் நம்மை கதைக்குள் இணைக்காது திரைக்கதையிலும் பெரிய ஒரு மந்தமாகவும்

 ரசிகர்களை திரைக்கதைக்குள் கொண்டு வரவில்லை என்றால் எப்பேர்ப்பட்ட படமும் தோல்விக்கு உதாரணமாக அமையும் என்பதில் 

ADVERTISEMENT

இந்த ஒரு படமும் அதே நிலையில் தான் இருக்கிறது

படத்தில் தளபதி விஜய் ஆட்ட நாயகன் என வர்ணிப்பார்கள் அதற்கு ஏற்றது போல் படத்தின் ஆக்சன் காட்சிகளிடம் சென்டிமென்ட் காட்சிகளிலும் காமெடி காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் பூந்து விளையாடுகிறார் 

Vijay

ஆனால் இவர் முழுவதாக ஆட்டம் ஆடி விளையாட வில்லை அதுதான் படத்தின் குறை எங்கேயும் உணர்வுபூர்வமாக குடும்பக் கதையை சொல்ல தவற விட்டிருக்கின்றார் வம்சி

இந்தப் படம் குடும்ப செண்டிமெண்ட் ஆன ஒரு கமர்சியல் திரைப்படம் என்பதால் இந்த படத்தின் ஹீரோயினான ராஜ்ம்காவுக்கு வழக்கம்போல் படத்தில் வேலை எதுவும் பெருசாக இல்லை

 ரஞ்சிதமே பாடலில் மட்டும் நடனம் ஆடிவிட்டு செல்வது போல் தான் அவருக்கான கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது

ADVERTISEMENT

படத்தில் தளபதி விஜய் அவருக்கு பிறகு முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது சரத்குமார் மற்றும் அவருடைய மனைவியாக வரக்கூடிய ஜெயசுதா

இருவர் மட்டும் தான் பிரகாஷ்ராஜ் வில்லனாக வந்தாலும் வழக்கமான ஒரு நடிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறார்

 யோகி பாபு முதல் பாதியில் ஒரு சில இடங்களில் மட்டுமே நம்மை சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார் 

தமனின் இசையில் ரஞ்சிதமே பாடல் மட்டுமே திரையில் ரசிகர்களை கொண்டாட வைக்கிறது பின்னணி இசையில் மேலும் கவனம் செலுத்தி இருக்க வேண்டியிருக்கிறது

மற்ற பாடல்கள் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்னமோ தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டம்  செய்வது குறைவாகத்தான் இருந்தது 

ADVERTISEMENT

Varisu

விஜய் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அவருடைய வீடு பிரமாண்டமாக கட்டப்பட்டது அதேபோல் அவர் வைத்திருக்கக்கூடிய ரோஸ் ராய்ஸ் கார் அவருடைய கம்பெனி கேபின் என்று

இவை மூன்றுமே அதிகப்படியாக படத்தில் காட்டப்பட்டது முக்கியமாக வீட்டை சொல்லலாம் கிட்டத்தட்ட ஒரு இடத்தில் சீரியல் போலவே படத்தை கையாண்டிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும் 

என்னதான் பெரிய பணக்கார குடும்பம் என்றாலும் அடிக்கடி குடும்பத்தின் மற்ற சொந்தக்காரர்களுடன் அவர்கள் முன்பாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறது

விஜய்யின் குடும்பம் பணக்கார குடும்பத்தின் கதை என்பதால் சாமானிய குடும்ப ரசிகர்களுக்கு நெருக்கமானா படமாக அமைய வாய்ப்பு சுத்தமாக இல்லை

வாரிசு திரைப்படத்தின் நீலத்தையாவது குறைத்திருக்க வேண்டும் அதையும் பட குழு செய்யவில்லை படத்திற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம்

ADVERTISEMENT

இரண்டு பாடல்களையும் சில காட்சிகளையும் தாராளமாக வெட்டி எறிந்து இருந்தால் படத்தில் ஏதோ ஒரு இடத்திலாவது திருப்தி அடைந்திருக்கலாம் அதையும் பட குழு செய்யவில்லை

கதையிலும் காட்சி அமைப்புகளும் மனதை கவரும் படியும் இல்லை ரசிகர்களை உணர்ச்சிபூர்வமாக கட்டுக் கோப்பில் வைக்கும் படியும் கதைக்களம் அமைக்கப்படவில்லை varisu movie

குடும்ப கதை என்றால் செண்டிமெண்ட்டிற்கு பஞ்சம் இல்லாமல் எடுக்கக்கூடிய இயக்குனர்கள் மத்தியில் சென்டிமென்ட் என்றால் என்ன என்று கேட்கக்கூடிய அளவிற்கு தான் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி இருக்கிறார் தெலுங்கு இயக்குனர் வம்சி

குறிப்பாக இந்த படத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல் எல்லாம் வைக்கப்பட்டு இருந்தது, ஆனால் விஜய்க்கும் அவருக்கும் அவருடைய அம்மாவுக்கான செண்டிமெண்ட் காட்சிகள்

சரியாக ரசிகர்களை கவரும் வகையிலும் அவர்களை கண்கலங்க வைக்க கூடிய வகையில் இல்லை என்பது வேதனை கூறியது 

ADVERTISEMENT

படத்தின் ஒவ்வொரு பிரமோசனிலும்  இந்த திரைப்படம் எமோஷனல் ட்ராமா சென்டிமென்ட்  திரைப்படம் என்றும் கண்டிப்பாக ரசிகர்களை கண்கலங்க வைக்கும் என்று கூறப்பட்டது,

ஆனால் எதுவுமே இல்லை என்பது தான் ரசிகர்களை வேதனைக்குரிய நிகழ்வாக மாற்றுகிறது,

பழைய ஹியூமர் சென்ஸ் சில் அங்கங்கு ஒரு டைமிங் காமெடிகளை கொடுக்கக்கூடிய விஜய்யை நம்மளால் பார்த்து ரசிக்க முடிகிறதே தவிர மற்றபடி எதுவும் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

இவர் தெலுங்கு இயக்குனர் என்பதற்கு சில சான்றுகளாக படத்தின் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் வேண்டுமானால் ஆஹா ஓகோ  என்று சொல்லிக் கொள்ளலாம் ஆனால், 

ADVERTISEMENT

இதே நிலைமை நீடித்தால் விஜய் தொடர்ச்சியாக இதே படங்களை தான் நடிக்க வேண்டி இருக்கும் அதையும் அவருடைய ரசிகர்கள் பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT