தமிழ் சினிமா செய்திகள்

வாத்தி ட்ரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

VaathiTrailer தனுஷ் அவருடைய நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வந்து மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடு இருந்தது
அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில்
வெளியாகியிருந்த திரைப்படம் நானே வருவேன். 

இந்த ஒரு திரைப்படம் வெளிவந்து தனுஷ் உடைய நடிப்பு என்பதை ரசிகர்கள் பெருவாரியாக மிக பிரமிக்க கூடிய வகையில்
தனுஷ் நடிப்பு இந்த ஒரு திரைப்படத்தில் இருக்கிறது என்றும் தனுஷ் நெகட்டிவ் ரோல்
மிக அற்புதமாக செய்திருக்கிறார் என்ற விமர்சனம் கிடைத்திருந்தது ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.

இதற்கு முன்பு வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு கிடைத்திருந்த வெற்றியும்  நானே வருவேன் திரைப்படத்திற்கு சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தளபதி 67 படத்திற்கு லியோ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது

இதனை அடுத்து தனுஷ் அவருடைய நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில்
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே தனுஷ் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வாத்தி திரைப்படத்திற்கான டீசர் வெளியாக இருந்தது
அந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருந்தது. 

ADVERTISEMENT

வாத்தி திரைப்படத்தில் தனுஷ் ஒரு வாத்தியாராக நடித்திருக்கிறார் இந்த படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் இணைந்து நடித்திருக்கிறார் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான பாடல் வெளிவந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது அந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்  மத்தியில் நல்ல ஒரு ஆதரவு கிடைத்திருக்கிறது.

அதே வேலையில் வாத்தி திரைப்படத்தை வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி   வெளியிட போவதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது.

வாத்தி ட்ரைலர் – VaathiTrailer

வாத்தி திரைப்படத்திற்கான தமிழ்நாடு விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது.
அந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
வாத்தி படத்திற்கான ஆடியோ லான்ச் அண்மையில் கடந்த சனிக்கிழமை வெகு சிறப்பாக சென்னையில் செயல்படக்கூடிய சாய்ராம் கல்லூரியில் வாத்தி படத்திற்கான ஆடியோ லான்ச்சை படக்குழுவினர் நடத்தி முடித்திருந்தனர்.

ஏற்கனவே வாத்தி திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்சை  Netflix  நிறுவனம் மிகப்பெரிய ஒரு தொகை கொடுத்து வாங்கி இருப்பதாக ஏற்கனவே கடந்த பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தான் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருந்த வாத்தி திரைப்படத்திற்கான ட்ரெய்லர் ரிலீஸ் சம்பந்தமான முக்கிய அறிவிப்பு பல அறிவித்திருக்கின்றது.

வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி அதாவது நாளை வாத்தி திரைப்படத்திற்கான ட்ரெய்லரை வெளியிடப் போவதாக பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது
ஆனால் எந்த டைம் ட்ரைலர் வெளியாகும் என்பதை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT