தமிழ் சினிமா செய்திகள்

தனுஷ் வாத்தி பட விமர்சனம்

Vaathi Movie தனுஷ் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கின்ற திரைப்படம் வாத்தி
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் தனுஷ் அவருக்கு
ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் வாத்தி திரைப்படம் வெளியாகியிருக்கிறது இந்த படம் போன டிசம்பர் மாதம் வெளியாக வேண்டியது
ஒரு சில பிரச்சினை காரணமாக படம் தள்ளிப் போய் தற்போது வெளிவந்திருக்கிறது.
ஏற்கனவே படத்தின் டீசர் ட்ரெய்லர் பாடல்கள் ஆகியவற்றிற்கு ரசிகர் மத்தியில் நல்ல ஒரு ஆதரவு கிடைத்திருந்தது.

வாத்தி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

1990களில் உருவெடுத்த கல்வி வியாபாரத்தின் பின்னணியில்தான் வாத்து திரைப்படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.
குறிப்பாக 1998 இல் இருந்து 2000ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

மாவீரன் படத்தின் முதல் பாடல் எப்படி இருக்கு

கல்வியை வியாபாரமாக பார்க்கும் பெரும் புள்ளிகளுக்கும் கல்வியை சேவையாக பார்க்கும் ஒரு ஆசிரியருக்கும் இடையே நடக்கக்கூடிய காரசார விவாதங்கள் தான் படத்தின் கதை.

ADVERTISEMENT

அரசு பள்ளிகளில் உள்ள நல்ல ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பெரும் தொகைக்கு
தனியார் கல்வி நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்துகின்றனர்.
இதனால் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது பள்ளிகளை மூடும் சூழல் ஏற்படுகிறது
இதனால் அரசுக்கு சிக்கல் வருகிறது.

Dhanush is Vaathi Movie

தனியார் பள்ளி நிறுவனங்கள் அரசு பள்ளியை நடத்துவதாக தத்தெடுத்து வாங்கி வைத்திருக்கின்றனர்.
தனியார் பள்ளியில்  தரம் குறைந்த ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு ஆசிரியர்களாக அனுப்புகின்றனர்.
ஆனால் அப்படி செல்லும் தனுஷ் பல்வேறு சவால்களுக்கு மத்தியில்
சோழவரம் அரசு பள்ளியை 100 சதவீதம் தேர்ச்சி அடைய வைக்கிறார்.
அவர்களை டாக்டர் , இன்ஜினியர், வக்கீல் , ஆக்க முயற்சிக்கிறார்  அதன்பிறகு அவருக்கு வரும் சிக்கல்கள்
என்னென்ன அவரை நம்பிய  மாணவர்களை தேர்ச்சி அடைய வைத்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதி கதை.

படத்தின் கதைக்களம் என்று பார்க்கும் பொழுது வாத்தி திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளும் எடுக்கப்பட்டதால்
ஆந்திர தமிழக எல்லைப் பகுதியில் இருக்கும் சோழவரம் என்ற ஊரை கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.
அதன் மூலம் இது தமிழ் படமா அல்லது தெலுங்கு படமா என்ற கேள்வி
வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து இருக்கின்றன.

என்ன இருந்தாலும் வாத்தி திரைப்படத்தை பார்க்கும் போது இது ஒரு டப்பிங் படம் என்ற உணர்வையே கொடுக்கின்றது.
மேலும் இந்த படத்தில் நடித்திருக்க கூடிய அதிகமான நடிகர்கள் முழுக்க முழுக்க தெலுங்கு நடிகர்கள்
தெலுங்கு திரைப்படத்திற்கு என்ற ஒரு தனித்துவம் இருக்கிறது.
தமிழ் திரைப்படத்திற்கு என்று தன்னிகரான ஒரு தனித்துவம் இருக்கிறது இந்த படம் இரண்டிலும் 
இணையாத வகையில் அமைந்திருக்கிறது.

வாத்தியாராக வளம் வரக்கூடிய தனுஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து கொடுத்திருக்கிறார்.
தனக்கு விதித்த சபாநாயக ஏற்றுக்கொண்டு எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று போராடுகிறார்.

ADVERTISEMENT

வாத்தி விமர்சனம்

அவருடைய போராட்டமும் பெரும் முயற்சியும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வு நமக்கு வரவேண்டும்
அவ்வாறு உணர்வு நமக்கு வரவில்லை என்பதால் படம் ரசிகர்களிடம் சரியாக போய் சேரவில்லை
அந்த அளவிற்கு தான் இயக்குனர் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.

அதேபோல அரசு பள்ளியில் ஆசிரியராகவும் தனுஷை காதலிக்கும் பெண்ணாகவும் வரும் சமியுத்தா அவருக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தனுஷ் அதிக காட்சிகள் எதுவும் அவருக்கு கிடையாது.

எல்லா படங்களும் ஹீரோயினிக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் கிடைக்குமோ அதுதான் இந்த படத்திலும் சம்யுக்தா  அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

எப்போதும் போல நாம் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட பழைய கதை தான் செயல்படாத அரசு பள்ளிக்கூடம்
மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக்கூடிய ஆசிரியர்கள் அவர்களுக்கு வரும் சிக்கல் என்பதே
இந்த படத்தின் கதைக்களமாகவும் ரசிகர்கள் பல படங்களை பார்த்து சலித்த கதை தான்
பல படங்களின் சாயல் இந்த ஒரு படத்திலும் பார்க்க முடிகிறது.

படத்தில் ஒரு சில இடங்களில் சென்டிமென்ட் விஷயங்கள் சரியாக அமைத்திருந்தாலும் சில இடங்களில்
இந்த சென்டிமென்ட் காட்சிகள் எடுபடவில்லை அப்படிப்பட்ட காட்சிகள்
ரசிகர்களை கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையில் வா வாத்து என்ற பாடல் அனைவரையும் ரசிக்க வைக்கிறது பின்னணி இசை
மிக நன்றாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. Vaathi Movie

ADVERTISEMENT

வாத்தி 100% மாணவர்களை தேர்ச்சி அடைய வைத்திருக்கிறார். இருந்தாலும் வாத்தி 35 மார்க் எடுத்து
ஜஸ்ட் பாஸ் என்ற நிலையிலேயே இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT