தமிழ் சினிமா செய்திகள்

சூர்யா 42 ஃபர்ஸ்ட் லுக் செம மாஸ் அப்டேட்

Suriya 42 நடிகர் சூர்யா அவருடைய நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன்
திரைப்படம் நேரடியாக தியேட்டரில் வெளியாகியிருந்தது
இதனைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் தற்போது அவருடைய நாற்பத்தி இரண்டாவது திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் மிகப் பிரம்மாண்டமான ஒரு திரைப்படமாக
இந்த படம் உருவாகி வருகிறது. சூர்யா வின் சினிமா திரை பயணத்தில் இந்த படம்
மிகப்பெரிய ஒரு பட்ஜெட் என்றும் கூறப்படுகிறது இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

சிறுத்தை சிவா தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம், விசுவாசம் என்று
அடுத்தடுத்து படங்கள் வெற்றி படங்களை கொடுத்த நிலையில்
கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து அண்ணாத்தை திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

ஓடிடியில் தனுஷின் வாத்தி வசூலிலும் அவர்தான் வாத்தி

இதனை தொடர்ந்து சூர்யாவின் 42வது படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைந்தது
நடிகர் சூர்யா கதாநாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்
இந்த படத்தை தயாரிக்கிறது இந்த படத்திற்கு சூர்யா அவருக்கு ஜோடியாக
பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார் ஏற்கனவே  
தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் புஷ்பா
புஷ்பா 2 திரைப்படத்திற்கு அவர்தான் இசையமைக்கிறார்.

சூர்யாவின் 42வது படத்திற்கு இசையமைக்க முக்கிய காரணம் புஷ்பா திரைப்படத்தின்
மிகப்பெரிய ஒரு வெற்றியும் பாடல்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதும்
முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதே போல் சிறுத்தை சிவா இயக்கியிருந்த
வீரம் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாந்த் இணைந்து பணியாற்றி இருந்தார்
சூர்யாவின் சிங்கம் படத்தில் இணைந்து பணியாற்றி இருந்தார்.

சூர்யாவின் நாற்பத்தி இரண்டாவது படம் பீரியட் பேண்டஸி திரைப்படம் என்று
தகவல் கிடைத்திருக்கிறது இதில் நடிகர் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்து வருகிறார்
இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது சூர்யா நடிக்கும் பீரியாடிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது
நடிகர் சூர்யாவின் கேரியர் நிச்சயம் இது மிகப் பிரம்மாண்டமான ஒரு படைப்பாகவும்
நல்ல ஒரு வெற்றி திரைப்படமாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

Suriya 42 – சூர்யா 42 ஃபர்ஸ்ட் லுக்

இதுவரை சூர்யா திரைப்படங்கள் பட்ஜெட்டை விட இந்தப் படம் மூன்று மடங்கு
அதிக பட்ஜெட் என்றும் தெரிவித்திருக்கிறார் இந்த விஷயம் நடிகர் சூர்யாவுக்கு தெரியாது
அப்படி தெரிந்தால் கண்டிப்பாக அவர் என்னை திட்டுவார் என்றும் ஞானவேல் ராஜா கூறியிருக்கிறார்
ஏனென்றால் ஞானவேல் ராஜா சூர்யாவின் நெருங்கிய உறவினர்.

மேலும் சூரியன் 42வது படத்திற்கான சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்
ரசிகர்கள் எல்லோரும் சூரியனை 48வது படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று
ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சூர்யாவின் 42வது படத்திற்கான
அறிவிப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றும் தெரிவித்திருக்கிறார்
அது மட்டும் இல்லாமல் வருகிற மே மாதம்
இந்த படத்திற்கான டீசரை வெளியிடுவோம் என்றும் சொல்லியிருக்கிறார்

மேலும் வரக்கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் படத்திற்கான
ரிலீஸ் தேதி இருக்கும் என்றும் கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்
சூர்யாவின் 42வது படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாக்கப்பட்ட வருகிறது.
இது இந்தியாவில் இருக்கக்கூடிய 10 மொழிகளின் வெளியிடப்பட குழு முடிவு செய்திருக்கின்றன.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கக்கூடிய சிம்புவின் பத்து தல
திரைப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்ட போது தான்
படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யாவின்
42வது படம் சம்பந்தப்பட்ட தகவல்களை இவ்வாறு வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT