தமிழ் சினிமா செய்திகள்

சூர்யா 42 படத்தின் முக்கிய அறிவிப்பு

Suriya 42 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக்கூடிய வருடம் நடிகர் சூர்யா.

சூர்யா நடிப்பில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்
இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார்

விடுதலை படம் எப்படி இருக்கு

ADVERTISEMENT

சூர்யாவின் 42வது திரைப்படம் இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட பத்து மொழிகளில்
இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது.

 சூர்யா திரைப்பயணத்தில் இந்த ஒரு திரைப்படம் தான் 10 மொழிகளில்
வெளியாக கூடிய முதல் படம் என்று சொல்லலாம்.

மேலும் சூர்யா 42 படத்தின் இந்தி உரிமையை டிஜிட்டல் உரிமையை சேர்த்து
100 கோடி ரூபாய் வரை விலை போய் இருக்கின்றது என்ற தகவல் அண்மையில் வெளிவந்திருந்தது
இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பொறுத்தவரை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம்
கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது

படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக
சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது.

சிறுத்தை சிவா சூர்யா கூட்டணியில் உருவாகி இருக்க இந்த ஒரு படத்தின்
மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

ADVERTISEMENT

ஏற்கனவே  எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த திரைப்படம் வசூல் ரீதியாக
வெற்றி படமாக இருந்தாலும் ரசிகர் மத்தியில் விமர்சனம் ரீதியாக எதிர்பார்த்த அளவில் அந்த படம் இல்லை.

அதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளிவந்திருந்த சூரரைப்போற்று, ஜெய் பீம் , ஆகிய படங்களுக்கு
விமர்சன ரீதியாக நல்ல விமர்சனம் கிடைத்திருந்தது
ஆனால் இந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாகி இருந்தது. 

இதனால் சூர்யா 42 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் 
மத்தியில் மிக அதிகமாக இருக்கிறது.

 தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம்
இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது என்றும்.

Suriya 42 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

படத்தின் படப்பிடிப்பு எல்லாம் வேலைகள் எல்லாம் நிறைவடைந்த உடன்
படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

ADVERTISEMENT

பீரியட் படம் என்பதால் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது
சூர்யா இந்த படத்திற்காக மொத்தம் ஐந்து விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறார்
ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

ஏற்கனவே இந்த படத்திற்கான படம் படிப்பு வேலைகள் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சிகள்
எல்லாம் மிக பிரம்ப்பு ஊட்டுகிற வகையில் இருக்கிறது என்றும்

இந்த படத்திற்கான படம் படிப்பு வேலைகள் எல்லாமே விறுவிறுப்பாக தொடர்ச்சியாக
நடைபெற்று வருகிறது இந்த படம் ஒரு பீரியட் திரைப்படம் என்பதால் ஒரு சில காட்சிகளை எடுக்க
70 முதல் 80 நாட்கள் பீரியட் காட்சிகளை முடிக்க கால தாமதம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா அவர்கள் நடிக்கக்கூடிய அவருடைய 42வது திரைப்படத்தை காண படப்பிடிப்பை பொறுத்தவரை
வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரம் வரை
படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் நடைபெறும் என்றும் தகவல் கிடைத்திருக்கின்றது.

அதேவேளையில் ஒரு முக்கிய அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது
அந்த வகையில் சூர்யாவின் நாற்பத்தி இரண்டாவது திரைப்படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை
வருகிற ஏப்ரல் 16ஆம் தேதி காலை 09.05 மணி அளவில் வெளியிடப் போவதாகவும்
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்கும் என்றும்
படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே இந்த படத்திற்கான முதல் அறிவிப்பு வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று
எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் இத்தகைய ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT