தமிழ் சினிமா செய்திகள்

ஏ கே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதற்கு நயன்தாரா தான் காரணமா ?

AK 62 Movie அஜித் அவருடைய நடிப்பில் கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்திருந்த திரைப்படம் துணிவு
இந்தப் படம் ஜனவரி 11ஆம் தேதி வெளிவந்து உலகம் முழுக்க ரசிகர் மத்தியில் நல்ல
வரவேற்பையும் வசூலையும் வாரி குவித்திருந்தது.

துணிவு திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது அந்தப் படம் தற்போது
உலக அளவில் பத்தாவது இடத்திலும் இந்திய அளவில் தொடர்ந்து முதலிடத்தில் வகித்து வருகிறது.

பத்து தல படத்தின் டீசர் உடன் களமிறங்கும் சிம்பு

இதனைத் தொடர்ந்து அஜித் அவருடைய அடுத்த படம் ஏ கே 62 திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும்
அந்த படத்தை விக்னேஷ்வர் இயக்கப் போகிறார் அனிருத் இசையமைக்க போகிறார் என்றும்
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஆனால் திடீரென்று அஜித்தின் ஏ கே  62 திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டிருந்தார்.
அண்மையில் அதை விக்னேஷ் சிவனும் உறுதி செய்து இருக்கிறார்.

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் ஏ கே 62 திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் நயன்தாரா தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வலுவாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

விக்னேஷ் சிவன் திரைப்படத்தை இயக்க அஜித் நடிப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
படத்திற்கு ஏகே 62 என்று தற்காலிக தலைப்பு வைக்கப்பட்டது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது என்பது உறுதியானது.

AK 62 Movie – ஏ கே  62

ஏ கே  62 திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ் உரிமையை netflix  நிறுவனம் படத்தை தொடங்குவதற்கு முன்பே கைப்பற்றி இருக்கிறது.

படத்திற்கான நடிகர் தேர்வு செய்யும் பணியில் விக்னேஷ் சிவன் ஈடுபட்டார் அதன் படி வில்லனாக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்திருந்தனர்.
மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய இடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

விறுவிறுப்பாக நடந்து வந்த அஜித்தின் AK 62 திரைப்படத்திற்காண ஆரம்பகட்ட பணிகள் கடந்த மாதம் இறுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக மகிழ்ந்திருமேனி படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

விக்னேஷ்  எழுதிய கதை அஜித்துக்கும் லைக்காவுக்கும் பிடிக்காததால் படத்திலிருந்து விக்னேஷ் வெளியேற்றப்பட்டதாக முதலில் கூறப்பட்டது தற்போது புதிய தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

விக்னேஷ் சிவன் ஏ கே 62 இலிருந்து நீக்கப்பட்டதற்கு நயன்தாரா தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

ஏ கே 62 படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்தார்.
ஆனால் திரிஷாவுக்கு கை கொடுக்குமாறு லைக்கா நிறுவனம் கூறி இருக்கிறது. அதற்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

பின்னர் காஜல் அகர்வால் ஐஸ்வர்யா ராய் போன்ற நடிகைகளையும் லைக்கா பரிந்துரை செய்திருக்கிறது ஆனால் அவர்களையும் விக்னேஷ் சிவன் நிராகரித்திருக்கிறார்.

கடைசியாகத்தான் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் அவரிடம் பேசியதாக தகவல் வெளிவந்தது சம்பளம் உறுதி செய்யப் போகும்
வேளையில் அந்த நடிகை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் அஜித்திற்கு ஜோடியாக AK 62 திரைப்படத்தில் நயன்தாராவின் நடிக்க வைக்க வற்புறுத்தியதை தொடர்ந்து.

லைக்கா நிறுவனமும் அஜித்தும் இது சரிப்பட்டு வராது என்று முடிவு எடுத்து விக்னேஷ் சிவனை
AK 62 திரைப்படத்திலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளிவர தொடங்கி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT