பாகசூரன் படம் எப்படி இருக்கு
bakasuran movie தமிழ் சினிமாவை பொருத்தவரை பலி வாங்கும் கதைகளுக்கு பஞ்சம் இல்லை அதேபோல்தான்
கிராமத்து பின்னணிகள் மிக பாசமான ஒரு அப்பாவின் பழிவாங்கும் கதை தான் இந்த பாகசூரன்.
படத்தின் கதைக்களம் என்று பார்க்கும் பொழுது கடலூரில் இருந்து சேலத்திற்கு
ஒரு கிராமத்தில் வந்து கோவில் சேவை செய்து வாழ்ந்து வருகிறார் செல்வராகவன்.
அவர் அடுத்தடுத்து மூன்று கொலைகளை செய்கிறார் ஒரு அப்பாவி மனிதரா
இத்தனை கொலைகளை செய்கிறார் என்று கேள்வி ஒரு பக்கம் நமக்கு இருக்கிறது.
மறுபக்கம் தன் அண்ணன் மகளின் தற்கொலைக்கு காரணமான பிரச்சனையும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்.
முன்னாள் ராணுவ மேனேஜர் ஆன நடராஜ் செல்வராகவன் ஏன் கொலைகள் செய்கிறார்.
நட்ராஜ் அண்ணனின் மகளின் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடித்தார்
இல்லையா என்பதையும் படத்தின் கதை.
இந்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி ஏற்கனவே திரௌபதி, ருத்ரா தாண்டவம்,
பழைய வண்ணாரப்பேட்டை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்
இவரை ஒரு ஜாதி இயக்குனர் என்று சிலர் குறிப்பிடுவதுண்டு ஆனால்
இந்த படத்தில் அதை உடைத்து எறிந்து இருக்கிறார்.
கல்வி நிலையங்களில் நடக்கும் பாலியல் கொடுமை இளம் பெண்களுக்கு
மொபைல் போன்கள் மூலமாக நடக்கும் பாலியல் தொல்லை ஆகியவற்றை மையப்படுத்தி
இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
ஒரு அப்பாவி கிராமத்து அப்பா கதாபாத்திரத்திற்கு செல்வராகவன் கச்சிதமாக பொருத்தமாகவே இருக்கிறார்
அவர் என்னதான் பல பெரிய திரைப்படங்களை இயக்கி அவர் பெரும் இயக்குனர் என்று பெயர் பெற்றிருந்தாலும்
இந்த படம் மூலம் அவர் மிகச்சிறந்த நடிகர் என்ற பெயரை பெறுகிறார்.
பாகசூரன் படம் எப்படி – bakasuran movie
சில எமோஷனலான மற்றும் தவிக்க கூடிய காட்சிகளிலும் செல்வராகவன் நடிப்பு திறமையை காட்டி இருக்கிறார்.
முன்னாள் மேஜர் நடராஜ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய குற்றங்களை பற்றிய
க்ரைம் வீடியோக்களை பதிவிடக்கூடிய. யூடுப்பரகா நடித்திருக்கிறார்
அவர் கதாபாத்திரம் மூலம் அப்பாவி பெண்கள் எப்படி பாலியல்
வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை படமாக எடுத்துக் கொடுக்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் மகன்கள் மகள்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும் என்பதை இந்த படத்தில் அனைவருக்கும் எச்சரிக்கை கூடிய கருவாகக் அமைந்திருக்கிறது.
படத்தின் கதையும் மெதுவாக நகர்கிறது இடைவெளிக்கு பின் செல்வராகவும் அவரது மகள் பற்றிய பிளாஷ்பேக்
காட்சிகளை சுருக்கமாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்
மூன்று கொலைகள் ஒரு அப்பாவி பெண்ணின் தற்கொலை என பரபரப்பான
திகிலுக்குரிய விஷயம் படத்தில் இருக்கிறது ஆனால் திரைக்கதையில் அந்த அளவிற்கு விறுவிறுப்பு இல்லை.
சாம்சங் சி எஸ் இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது குறிப்பாக “சிவ சிவாயம்” பாடல் தெய்வீகத் தன்மையை உணர்த்துகிறது.
அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாவற்றிலும் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது.
அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தினால் நன்மை பயக்கும் தவறான வழியில் பயன்படுத்தினால்
தவறு நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்
ஆனால் மொபைல் போன்கள் எல்லாம் நமது வாழ்க்கையை அழிக்க வந்த பாகசூரன் என்று கூறியிருக்கின்றன
இதை எவ்வாறு ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள என்றும் தெரியவில்லை மொபைல் போன் அவற்றை
நல்லவைகளுக்கு பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும் தவறான வழியில் பயன்படுத்தினால் தவறு நடக்கும் என்பது தான் உண்மை.
ஆனால் இங்கு மொபைல் போன்கள் எல்லாம் நமது வாழ்க்கையை அளிக்க வந்த பாகசூரன் ன்று முடித்திருக்கின்றனர்.
திரைக்கதையில் இன்னும் விறுவிறுப்பை கூட்டில் இருந்தால் மிகச் சிறந்த வெற்றி படமாக அமைந்திருக்கும்
அது படத்தில் குறைவு படத்தின் வெற்றியும் சற்று குறைவு.