தமிழ் சினிமா செய்திகள்

கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிக்கும் வெங்கட் பிரபு

Vijay Goat தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகிற திரைப்படம்
தி கிரேட் ஸ்டாப் ஆல் டைம் என்று சொல்லக்கூடிய கோட்

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பொறுத்தவரை கேரளா சென்னை ஹைதராபாத்துக்கு உள்ளிட்ட
இடங்களில் ஷூட்டிங்  என்பது நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக கேரளாவில் தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று முடிந்திருக்க நிலையில்
அங்கு ரசிகர்கள் தளபதி விஜய் அவருக்கு மிகுந்த ஒரு வரவேற்பையும் உற்சாகத்தையும் அளித்திருந்தனர்.

ஆரோவுக்கு அஜித் கொடுத்த அன்பு பரிசு

கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, உள்ளிட்ட பலர்
இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் பல வருடங்களுக்குப் பிறகு இந்த படத்திற்கு
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சென்னையில் இருந்து துபாய் வழியாக மாஸ்கோ புறப்பட்டு சென்றிருக்கிறார்
அங்கு தான் இந்த ஒரு கோட் திரைப்படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகளை  படக்குழு
இரு வாரங்களுக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 15 நாட்களில் முடிக்க படக்குழு முடிவு செய்து தற்போது வெளிநாட்டில்
படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

ADVERTISEMENT

Vijay Goat படம் பிடிப்பு

இந்த படம் பிடிப்பு வேலைகள் எல்லாம் முடித்துவிட்டு எதிர் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக
வருகிற 19ஆம் தேதி மீண்டும் நடிகர் விஜய் தமிழகம் திரும்புவார் என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு நடிகர் மட்டுமில்லாமல் பல குணச்சித்திர கேரக்டர்களை
எடுத்து நடிக்கக்கூடிய நடிகராகவும் பலம் வருகிறார் பல படங்களில் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் இயக்கக்கூடிய கோட் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இவர் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது அதன்படி கோட் திரைப்படத்தில் வெங்கட் பிரபு சிஎஸ்கே பேனாக நடித்திருக்கிறார் என்றும்

சமீபத்தில் கேரளாவில் எடுக்கப்பட்ட ஷூட்டிங்கில் வெங்கட் பிரபுவின் காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக
தகவல்கள் வெளியாகி இருக்கிறது இது மட்டுமல்லாமல் மேலும் ஒரு முன்னணி நடிகர் இந்த படத்தில்
கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

மிக விரைவில் இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை  படக்குழு வெளியிட முடிவு செய்திருக்கின்றன
இந்த ஒரு திரைப்படத்தைப் பொறுத்தவரை வருகிற ஆகஸ்ட் இறுதியில் படத்தை கொண்டு வருவதற்கு
பட குழு முயற்சி செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT