தமிழ் சினிமா செய்திகள்

சம்பளத்தை குறைத்த சிம்பு ஏன் தெரியுமா?

STR 48 Movie தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக பலம் பெற கூடியவர் சிம்பு இவர் நடிப்பில் தொடர்ச்சியாக
மாநாடு வெந்து  தணிந்தது காடு திரைப்படங்களை தொடர்ந்து அடுத்து வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் பத்து தல

சிம்பு அவருடைய நடிப்பில் அடுத்து வெளியாக காத்திருக்கின்ற திரைப்படம் பத்து தல
இந்த படத்தை ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை இயக்கியிருந்த ஒபிலி என் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்
இந்த படம் ஏற்கனவே கன்னட மொழி ஆகி மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்ற
மஃப்டி  படத்தினுடைய ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கான முதல் பாடல் நம்ம சத்தம் வெளிவந்திருந்தது இந்த படத்திற்கு
ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார் படத்திற்கான இரண்டாவது பாடல்
சம்பந்தப்பட்ட அறிவிப்புகளும் வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவியின் அகிலன் படம் எப்படி இருக்கு

இந்நிலையில் சிம்பு அவருடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகம் இருந்து வந்தது
அதன் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
சிம்புவின் அடுத்த படம் சிம்புவின் 48 வது படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற
திரைப்படத்தை இயக்கியிருந்த தேசிங்கு பெரியசாமி தான் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

சிம்பு வின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் இந்த படத்தை உலகநாயகன் கமல்ஹாசன்
அவருடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிம்புவின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக இது இருக்கும் என்று இந்த படத்தின் பட்ஜெட்
100 கோடி ரூபாயில் தயாரிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது
இந்த படத்தில் நடிகர் சிம்பு இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க போகிறாராம்.

மேலும் இதில் என்ன ஒரு ஆச்சரியமான முக்கிய தகவல் என்றால் நடிகர் சிம்பு மாநாடு வெந்து தணிந்தது காடு
என அடுத்தடுத்த படங்களில் நடித்திருந்தார் அந்த இரண்டு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தது
அவர் தனது சம்பளத்தை 40 கோடியாக உயர்த்தி விட்டதாக சமீபத்தில் செய்திகள் அதிக அளவில் வெளியானது.

ஆனால் தற்போது கமல்ஹாசன் தயாரிக்க கூடிய சிம்புவின் 48வது திரைப்படத்திற்கு சிம்பு தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக
தகவல் கிடைத்திருக்கிறது STR 48 Movie
சிம்புவின் இந்த சம்பள குறைப்புக்கு பின் ஒரு மாஸ்டர் பிளான் இருக்கிறது
என்றும் கூறுகிறார்கள்.

அது என்னவென்றால் இந்த படத்தின் மூலம் தனது மார்க்கெட் கண்டிப்பாக வந்து விடும் என்பதால்
இதற்கு கம்மியான சம்பளம் வாங்கிவிட்டு அதன் பிறகு நடிக்கக்கூடிய அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் போது
சம்பளத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்ற முடிவில் சிம்பு இருப்பதாகவும் தகவல் தெரிய வந்திருக்கிறது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT