தமிழ் சினிமா

வெந்து தணிந்தது காடு படம் இவ்வளவு நீளமா

சிம்புவின் வெந்து தணிந்தது காடு விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களைத் தொடர்ந்து சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிந்து இப்படத்திற்கான பின்னணி வேலைகள் என்று சொல்லக்கூடிய போஸ்ட்புரொடக்ஷன் வேலைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது

இந்தஒரு திரைப்படத்தை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது

யுவன் சங்கர் ராஜாவுக்கு டாக்டர் பட்டம்

ஏற்கனவே வெந்து தனிந்தது காடு திரைப்படத்திற்கான ட்ரெய்லர் படத்திற்கான பாடல்கள் வெளிவந்த ரசிகர் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று இருக்கிறது இந்தப் படத்தில் சிம்பு அவருக்கு ஜோடியாக சித்தி இதானி  இணைந்து நடித்திருக்கிறார் 

ADVERTISEMENT

படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் இந்த திரைப்படத்தை பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கிறது

வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கான பிரம்மாண்டமான ஆடியோ லான்ச் டிரைலர் லான்ச் அண்மையில் நடந்தது அப்போது படத்திற்கான ரன்னிங் டைம் அதிகார பூர்வமாகவே படத்தின் இயக்குனரான கௌதம் வாசுதேவ மேனன் தெரிவித்தார் படம் 3 மணி நேரத்திற்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது என்று அவர் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார் இது ரசிகருக்கு கொஞ்சம் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்திருக்கும் என்றே கூறலாம்

காரணம் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மூன்று மணிநேரப் படங்கள் என்றாலே தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரசிகர்களுக்கு விரும்பும் படியான காட்சியமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் நிலவி வருகிறது

ஆனால் படத்திற்கான காட்சி அமைப்புகளும் விறுவிறுப்பும் படத்தில் இருந்தால் கண்டிப்பாக வெற்றி அடையும் என்பதில் எந்த அச்சமும் தேவை இல்லை

மாறாக படத்தில் விறுவிறுப்பு இல்லாத பட்சத்தில் மூன்று மணி நேரம் என்பது ரசிகர்களுக்கு ஆறுதல் தராது என்றும் கூறலாம் படத்திற்கான காட்சியமைப்புகள் மட்டுமே படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மிகப்பெரிய ஒரு உந்துசக்தியாக இருக்கும் என்றே சொல்லலாம்.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT