தமிழ் சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு

Ponniyin selvan 2 இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக
வெளிவந்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்
இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்றிருக்கிறது
படம் உலகம் முழுக்க 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை நிகழ்த்தி இருந்தது
இந்த படம் கடந்த வருடம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகியிருந்தது
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி வசூலை வாரி குதித்தது.

இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன்,
பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ரகுமான், பிரபு, விக்ரம் பிரபு,
காளிதாஸ் ஜெயராமன், ஜெயராமன் உள்ளிட்ட பல நட்சத்திரம் பட்டாளங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற
ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியாகும் என்று பல குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்ற காரணத்தால்
இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான ஒரு வீடியோவை ஏற்கனவே
படக்குழு வெளியிட்டு ரிலீஸ் தேதி உறுதிப்படுத்தி இருந்தனர் படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள்
எல்லாம் ஏற்கனவே முடிந்திருக்கிற நிலையில் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ்
மற்றும் கிராபிக்ஸ் பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக தொடர்ச்சியாக நடந்து வருகின்றது.

ஏற்கனவே அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தை
ஏற்று நடித்திருந்தால் நடிகை திரிஷாவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் முக்கிய அறிவிப்பு
ஒன்றை படத்தின் தயாரிப்பு நிறுவனமான
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

Ponniyin selvan 2 -அக நக பாடல்

அதன்படி என்ன அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றால் பொன்னியின் செல்வன் 2
திரைப்படத்தின் முதல் பாடலான அகநக என்ற பாடல் வருகிற 20-ஆம் தேதி
அதாவது வருகிறது திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு வெளியாகும்
என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில்
அக நக என்ற ஒரு பாடல் இருக்கிறது அந்தப் பாடலின்
முழு நீள பாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

அதேபோல் ஒரு போஸ்டரையும் பட குழு வெளியிட்டு இருந்தது அந்த ஒரு போஸ்டரில்
இந்த படத்தில் குந்தவையாக நடித்திருக்க கூடிய நடிகை திரிஷா அவருடைய கையில்
ஒரு பெரிய வாளோடு நிற்கின்றார் போலும் அவருக்கு முன்னால்
நடிகர் கார்த்தி கண்களை கட்டிக்கொண்டு மண்டியிட்டு இருக்கிறார்.
இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருக்கிறது என்பதால்
ரசிகர் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது.
அதேபோல் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை இசைத்திருக்கிறார்.
பொன்னின் செல்வன் முதல் பாகத்தின் பாடல்களும் பின்னணி இசையும்
ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தது அதேபோல்
பொன்னின் செல்வன் 2 திரைப்படத்திலும் பாடல்களும் பின்னணி இசையும்
ரசிகர்களை நிச்சயம் கவர்ந்திழுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT