தமிழ் சினிமா செய்திகள்

அரண்மனை 4 படத்திற்காக விஜய்சேதுபதி மற்றும் சந்தானம் பெரும் சம்பளம் ?

Aranmanai 4 இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு
வெளிவந்திருந்த திரைப்படம் அரண்மனை இந்த படத்தை  சுந்தர் சி  இயக்கி நடித்திருந்தார் 

மேலும் இந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி வினய் ஆண்ட்ரியா ராய் லட்சுமி சந்தானம் கோவை சரளா
மனோபாலா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் இந்த படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்திருந்தார்

அரண்மனை திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தில நல்ல வரவேற்பையும் வசூல் ரீதியாக
மிகப்பெரிய ஒரு வசூலையும் வாரி குவித்தது படத்திற்கான பட்ஜெட் 12 கோடி என்று சொல்லப்பட்டது.
ஆனால் படம் 65 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய ஒரு சாதனை படைத்திருந்தது

தளபதி 67 தாமதம் ஏன் தெரியுமா?

இதனை அடுத்து சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 2 திரைப்படம் வெளியாகி இருந்தது அந்த திரைப்படத்தில் சுந்தர் சி இயக்கி அவரும் நடித்திருந்தார்

ADVERTISEMENT

திரிஷா ஹன்சிகா மோத்வானி சித்தார்த்  பூனம் பாஜ்வா கோவை சரளா சூரி மனோபாலா உள்ளிட்டோர்  நடித்திருந்தனர்.
இந்த படம் கடந்த ஜனவரி 29ஆம் தேதி 2016 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது இந்த
படத்தின் பட்ஜெட் 15 கோடி என்றும் ஆனால் படம் 39 கோடிக்கு மேல வசூலித்திருந்தது

அரண்மனை – Aranmanai 4

அரண்மனை 2 திரைப்படம் சுந்தர் சி சினிமா பயணத்தில்  காமெடி பயம்  கலந்த திரைப்படமாக இருந்தால் தான் நல்ல வரவேற்பு பெற்றது

 இதனுடைய தொடர்ச்சியாக அரண்மனையின் 3 பாகம் வெளிவந்திருந்தது இந்தப் படத்தில் சுந்தர் சி இயக்கி நடித்திருந்தால்
மேலும் ஆர்யா ராசிக் கண்ணா ஆண்ட்ரியா சாக்ஷி  அகர்வால் விவேக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்

அரண்மனை 3 படத்திற்கான பட்ஜெட் என்று பார்க்கும் பொழுது 22 கோடி இந்த படம் உருவாக்கப்பட்டது ஆனால்
இந்த படம் 50 கோடி வசூல் செய்திருந்தது
ஆனால் படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு காமெடியும் பயமும் சரியான காட்சி அமைப்புகள் இல்லாத படத்திற்கு பின்னாடிவாக பார்க்கப்பட்டது 

ஆனால் படம் வசூலில் செம மாஸ் காட்டியது என்று தான் சொல்ல வேண்டும் இதனைத் தொடர்ந்து
சுந்தர் சி இயக்கி அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் காபி வித் காதல் இந்த ஒரு திரைப்படம் சரியாக போகவில்லை

ADVERTISEMENT

 இதனால் சுந்தர் சி யின் ஆஸ்தான திரைப்படமான அரண்மனை 4ம் பாகத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான முதல் கட்டப்பணிகள் எல்லாமே விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது 

அரண்மனை 4

அரண்மனை 4ம்  படத்தில் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிக்க வைக்க சுந்தர் சி முடிவெடுத்திருக்கிறார்.

அதற்காக விஜய் சேதுபதி மொத்தம் 40 நாட்கள் தொடர்ச்சியாக கால் ஷூட் ஒதுக்கி இருக்கிறார் என்றும்.

விஜய் சேதுபதிக்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. 

மேலும் இந்த படத்தில் சந்தானம் நடிக்க கூடும் என்றும் கூறப்படுகிறது சந்தானம் இந்த படத்தில்
காமெடியனாக நடிக்க போகிறாரா அல்லது இரண்டாவது ஹீரோவாக நடிக்க போகிறாரா
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ADVERTISEMENT

சந்தானத்திற்கு இந்த படத்திற்காக ஏழு முதல் எட்டு கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

 இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது ஏற்கனவே அஜித்தின் 62வது படத்திலும் சந்தனம் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் அந்தப் படத்தையும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது 

அரண்மனை 4 படத்தை வருகிற மார்ச் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரம் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள்  எல்லாம் நடைபெற இருக்கின்றது 

விஜய் சேதுபதி – அரண்மனை 4

இந்த படம் மிகுந்த பொருட்செலவில்  பிரம்மாண்டமாகவும் அதுமட்டுமல்லாமல் அரண்மனை திரைப்படத்தின் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய ஒரு வெற்றி வகை சூடி இருந்தது  

அதேபோல் இந்த அரண்மனை நாலாம் பாகம் அமையும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

படத்தின் பட்ஜெட் என்று பார்க்கும் பொழுது இந்த படத்திற்காக 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறதாம்.

சுந்தர் சி அவர்களுக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக இந்த படம் அமைய இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

விஜயசேதுபதி ஏற்கனவே திகில் கலந்த படத்தில் நடித்திருக்கிறார் அந்த வகையில் அவருடைய முதல் படமான பீட்சா திரைப்படம் இருந்தது கடைசியாக அனுபெல் சேதுபதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்

 தற்போது அரண்மனை திரைப்படத்தின் நாலாம் பாகத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT