துணிவு முதல் பகுதி பேன்ஸ்க்கு இரண்டாம் பகுதி யாருக்கு ?
Thunivu தல அஜித் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் துணிவு இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கியிருக்கிறார் இந்த படத்தை போனி கபூர் தயாரித்திருக்கிறார்
இந்த ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது ஏற்கனவே துணிவு திரைப்படத்திற்கான பாடல்கள் படத்திற்கான ட்ரெய்லர் என்று வெளிவந்து ரசிகர் மத்தில நல்ல அமோகமான ஒரு வரவேற்பை பெற்று வருகின்றது
இந்தப் படத்தில் தல அஜித் அவர்கள் ஒரு நெகட்டிவ் ஷேட் உள்ள கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பது என்பதை ட்ரெய்லரை பார்க்கும்போதே நம்மால் கூறமுடியும்
அதே போல் துணிவு படத்திற்கான ரன்னிங் டைம் என்று பார்க்கும் பொழுது இரண்டு மணி நேரம் இருபத்தி ஆறு நிமிடங்கள் என்றும் சென்சார் ரிப்போர்ட்டில் துணிவு திரைப்படத்திற்கு யுஏ சர்டிபிகேட் கிடைத்திருக்கின்றது Thunivu
மேலும் துணிவு திரைப்படத்திற்கான ரிலீஸ் தேதி எதுவாக இருக்கும் என்று பார்க்கும் பொழுது ஜனவரி 12ஆம் தேதி வியாழக்கிழமை வெளிவரும் என்று கூறப்பட்டு வந்த நிலையில்
தற்போது வருகிற ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை வெழியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒறே தேதியில் வெளிவர இருக்கிறது
அதேவேளையில் படத்தின் இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொல்லும்போது துணிவு திரைப்படம் முதல் பகுதி அஜித் ரசிகர்கள் கொண்டாடுவது போல் இருக்கும்
படத்தின் இரண்டாம் பகுதி எல்லா ரசிகர்களும் கொண்டாடுவது போல் இருக்கும் மேலும் குடும்ப ரசிகர்களையும் கதைக்குள் இழுக்கிற வகையில் அனைவருக்கும் இந்த படம் கனெக்ட் ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்.