தமிழ் சினிமா செய்திகள்

வாத்தி ஆடியோ லான்ச் அறிவிப்பு

Vaathi தனுஷ் அவருடைய நடிப்பில் கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படம் வந்து மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடி இருந்தது
அதனைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் நானே வருவேன். 

இந்த ஒரு திரைப்படம் வெளிவந்து தனுஷ் உடைய நடிப்பு என்பதை ரசிகர்கள் பெருவாரியாக மிக பிரமிக்க கூடிய வகையில்
தனுஷ் நடிப்பு இந்த ஒரு திரைப்படத்தில் இருக்கிறது என்றும் தனுஷ் நெகட்டிவ் ரோல் மிக அற்புதமாக செய்திருக்கிறார்
என்ற விமர்சனம் கிடைத்திருந்தது ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.

இதற்கு முன்பு வெளியாகி இருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு கிடைத்திருந்த வெற்றியும் மக்களும் நானே வருவேன் திரைப்படத்திற்கு சுத்தமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

தளபதி 67 வில்லனுக்கு இவ்வளவு கோடி சம்பளமா ?

இதனை அடுத்து தனுஷ் அவருடைய நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.
ஏற்கனவே தனுஷ் அவருடைய பிறந்தநாள் ஸ்பெஷலாக வாத்தி திரைப்படத்திற்கான டீசர் வெளியாக இருந்தது அந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்திருந்தது. 

ADVERTISEMENT

வாத்தி திரைப்படத்தில் தனுஷ் ஒரு வாத்தியாராக நடித்திருக்கிறார் இந்த படத்தில் தனுஷ் அவருக்கு ஜோடியாக
சம்யுக்தா மேனன் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்

ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான பாடல் வெளிவந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது அந்த இரண்டு பாடல்களுக்கும் ரசிகர்  மத்தியில் நல்ல ஒரு ஆதரவு கிடைத்திருக்கிறது.

Vaathi – வாத்தி ஆடியோ லான்ச்

அதே வேலையில் வாத்தி திரைப்படத்தை வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி   வெளியிட போவதாக அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்திருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லரை வருகிறது பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு மேல் வெளியிடலாம் என்று படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

வாத்தி திரைப்படத்திற்கான தமிழ்நாடு விநியோக உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் வாங்கியிருக்கிறது அந்நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த வகையில் வாத்தி படத்திற்கான ஆடியோ லான்ச் நாளை சென்னையில் செயல்படக்கூடிய சாய்ராம் கல்லூரியில் 
வாத்தி படத்திற்கான ஆடியோ லான்ச்சை நடத்த போவதாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

ADVERTISEMENT

ஏற்கனவே வாத்தி திரைப்படத்திற்கான டிஜிட்டல் ரைட்ஸ்சை  netflix நிறுவனம் மிகப்பெரிய
ஒரு தொகை கொடுத்து வாங்கி இருப்பதாக ஏற்கனவே கடந்த பொங்கல் ஸ்பெஷல் அறிவிப்பில் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்கக்கூடிய ஆடியோ லான்ச்சில் தனுஷ் எந்த மாதிரி பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர் மத்தியில் மிக அதிகமாக இருந்தது வருகிறது.
கடைசியாக திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் பிரமாண்டமாக சென்னையில் நடந்தது அதை தொடர்ந்து இந்த வாத்தி படத்திற்கான ஆடியோ லான்ச் நாளை நடக்க இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT