தமிழ் சினிமா செய்திகள்

ஜெயம் ரவியின் அகிலன் படம் வெளியாவதில் சிக்கல்

Agilan movie ஜெயம் ரவி அவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி வாகை சூடி இருந்தது
திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக சோழ நாட்டு அரசராக நடித்திருந்தார் பொன்னியின் செல்வன் திரைப்படம்
வெளிவந்து உலகம் முழுக்க 500 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கின்றது. 

அதே வேளையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என்று
ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்தப் படங்களை தாண்டி ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் என்று பார்க்கும் பொழுது
ஜனகணமன, இறைவன் , சைரன், ஆகிய படங்கள் வெளி வர காத்திருக்கின்றனர்.
ஜெயம் ரவி நடிப்பில் தனி ஒருவன் 2 படம் விரைவில் உருவாக இருக்கிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர காத்திருக்கின்ற திரைப்படம் அகிலன் இந்த ஒரு திரைப்படத்தை
எஸ் பி ஜனநாதன் உதவி இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார்.

ADVERTISEMENT

ஏற்கனவே இவர் நடிகர் ஜெயம் ரவியை வைத்து வட சென்னை பின்னணியை அடிப்படையாகக் கொண்டு
குத்துச்சண்டை போட்டிகளை மையப்படுத்தி பூலோகம் என்ற திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.
தற்போது இதே கூட்டணி இரண்டாவது முறையாக கைகோர்த்து இருக்கின்றது.

Agilan movie – அகிலன் படம்

அகிலன் படத்தில் ஜெயம் ரவி அவருக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் ப்ரியா பவானி சங்கர் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் தருண் அரோரா,  ஹாரிஸ் உத்தமன், இளங்கோ குமரவேல் ,
மது சூதன் ராகு, ஹாரிஸ் பெறாடி,  உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

அகிலன் திரைப்படத்திற்கு சாம் சி. எஸ்.  இசை அமைத்திருக்கிறார் ஏற்கனவே இந்த படத்திற்கான முதல் பாடல் டீசர் என்று வெளிவந்து ரசிகர் மதியம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அகிலன் திரைப்படம் துறைமுகம் சார்ந்த ஒரு கேங் ஸ்டார் படம் என்றும் கூறப்படுகின்றது படத்தில் கதாநாயகியாக நடித்த பிரியா பவானிசங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ஜெயம் ரவி அகிலன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது ஆனால் படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்த நிலையில் தான் இந்த மாதம் ரிலீஸ் செய்ய   தொடர்ச்சியாக வேலைகள் நடந்த நிலையில் இப்போது படத்திற்கு மீண்டும் சிக்கல் இருந்துள்ளது.

ADVERTISEMENT

படத்தின் பெரும்பாலான காட்சிகளை கடலில் படமாக்கப்பட்டுள்ளதால் சில தடை இல்லாத சான்றிதழ்களைப் பெற வேண்டிய நிபந்தனையில்  உள்ளதாம் பட குழு.

இதனால் அதற்கான பணிகள் தற்போது முழு  வீச்சல் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தை வருகிற மார்ச் மாதம் ரிலீஸ் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT