தமிழ் சினிமா செய்திகள்

நடிகர் அஜித்குமாரின் தந்தை காலமானார்

Ajith தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் ஒருவர் நபர் நடிகர் அஜித்
இன்று முக்கிய அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது அதில் அஜித் மற்றும்
அஜித் உடைய சகோதரர்கள் இணைந்தே ஒரே அறிக்கையாக வெளியிடப்பட்டிருந்தது.

எங்களது தந்தையார் பல நாட்களாக உடல் நலம் இன்றி படுத்த படுக்கையில் இருந்தார்.
இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார் நான்கு ஆண்டுகளாக
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும்
அக்கறையோடும் கவனித்து வந்தோம் எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக
இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தை 60 ஆண்டுகள் எங்கள் தாயின் அன்போடும் அர்ப்பணிப்போடும்,
நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

ஜெயிலர் திரைப்படத்தின் செம மாஸ்டர் பிளான்

இந்த துயர நேரத்தில் பலர் எங்களின் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும்
எங்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை போன் மூலம் அழைப்பு விடுத்தோ
அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போது உள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பையும் அல்லது
பதில் தகவல் அனுப்ப இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம்,
என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம்.

ADVERTISEMENT

எங்கள் தந்தையாரின் இறுதிச்சடங்கு ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.
எனவே இந்த இறப்பு தகவலை அறிந்து அனைவரும் எங்களுடைய துயரத்தையும் இழப்பையும்
புரிந்து கொண்டு குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும்
இறுதிச் சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும் படி
வேண்டிக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்தின் தந்தை இறந்த செய்தி கேட்டு அறிந்த
தமிழக முதல்வர் உள்பட தமிழகத்தின் பல முக்கிய அரசியல்வாதிகள் முதல் நடிகர்கள்
இயக்குனர்கள் திரை உலக பிரபலங்கள் என்று பலரும்
நடிகர் அஜித்தின் தந்தை இறந்ததற்கு தொடர்ந்து
தங்களுடைய அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர். Ajith

Ajith அஜித்தின் தந்தை காலமானார்

முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டிருந்த இரங்கல் பதிவில் நடிகர் அஜித்குமார் அவர்களின்
தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல் நல குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்
தந்தையின் பிரிவால் வாடும் அஜித் குமார் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தெரிவித்திருந்தார்.

அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் பதிவில்
தன்னைத்தானே காத்துக்கொண்ட தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்
அன்பு சகோதரர் திரு. அஜித் குமார் அவர்களின் தந்தை திரு. சுப்பிரமணியம் மறைந்தார் என்ற
செய்தி கேட்டு வருந்தினேன் தந்தையை இழந்த வாடும் திரு. அஜித் குமார் மற்றும்
அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அஜித் ரசிகர்கள் பலரும் அவருடைய வீட்டிற்கு வருவார்கள்
என்பதை முன்கூட்டியே யூகித்து தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது
மேலும் அஜித்தின் வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கின்றது.

ADVERTISEMENT

அதைப்போல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய்
அஜித்தின் அப்பா இறந்ததற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்

அஜித்தின் அப்பா சுப்ரமணியம் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு
வாகன மூலம் கொண்டுவரப்பட்டது அங்கு  அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது,
இறுதி சடங்கில் அஜித் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT