விடுதலை படம் எப்படி இருக்கு
viduthalai இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் விடுதலை
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
மேலும் சூரி விஜய் சேதுபதி பவானி ஸ்ரீ கௌதம் மேனன் உள்ளிட்ட பலர்
இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
படத்தோட கதைக்களம் என்று பார்க்கும் பொழுது ஒரு பெரிய மலையை திருடி
அதன் மூலம் பணத்தை சம்பாதிக்க நினைக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய நிறுவனம்
எங்கள் மக்களுக்கும் எங்கள் பகுதி தொழிலாளர்களுக்கு சொந்தமான மலையை
இன்னொருவன் திருடி சம்பாதிப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு குழு போராடுகிறது.
பத்து தல படம் எப்படி இருக்கு
அந்த குழுவின் தலைவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க உத்தரவிடப்படுகிறது
அதன் பிறகு போலீஸ் படை களம் இறங்குகிறது இதன்பிறகு என்ன நடக்கிறது என்பது படத்தில் கதை
அருமபுரி என்ற ஊரில் அருகில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது ஆனால் இந்த சுரங்கத்தை
எதிர்த்து விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற தீவிரவாத குழு போராடுகிறது
ரயில் குண்டுவெடிப்பு காவலர்களை கொல்வது என பல தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது
மக்கள் படைத்தலைவன் ஆன விஜய் சேதுபதி யார் என்று அரசுக்கு தெரிய வருகிறது.
அந்த குழுவின் டிரைவராக வேலைக்கு சேரும் சூரி ஓரிருமுறை விஜய் சேதுபதியை பார்க்கிறார்
தனது கடமையில் ஈடுபாட்டுடன் இருக்கும் சூரி மேலதிகாரி செத்தன் ஆணையை மதிக்காத காரணத்தால்
மெமோ கொடுக்கப்பட்டு பனி தண்டனை கொடுக்கப்படுகின்றது.
காவல்துறை குழுவுக்கு புதிய அதிகாரியாக டிஎஸ்பி கவுதம் மேனன் நியமிக்கப்படுகிறார்
அதன் பிறகு அந்த குழுவினர் விஜய் சேதுபதி கண்டுபிடித்தார்கள் சூரி
அதனுள் எப்படி வருகிறார் என்பது படத்தின் மீதி கதை
படத்திற்கான கதை கலத்தை காட்டுப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது
காவல்துறை குழு இருக்கும் இடம் படத்தில் கதாபாத்திரங்களுக்கான தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள்
என ஒவ்வொருவருமே குறிப்பிடும்படியான அதிகப்படியான ஈடுபாட்டை காட்டி இருக்கிறார்கள்.
viduthalai – விடுதலை படம் எப்படி
தமிழ் சினிமாவை தொடர்ந்து பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகும் படங்களை
கொடுக்கக்கூடிய இயக்குனர்களின் வெற்றிமாறனும் ஒருவராக தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.
குமரன் படத்தில் சூரி கதாநாயகனா என யோசித்தவர்கள் இந்த படத்தை பார்த்த போலிஸ் டிரைவர்
கதாபாத்திரத்தில் சூரி எந்த அளவிற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார்
என்பதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் ஒரு இடத்தில் கூட இதற்கு முந்தைய
நகைச்சுவை நடிகர் சூரியை இந்த படத்தில் பார்க்க முடியாது
மேலதிகாரியாக இருந்தாலும் தான் தவறு செய்யாத போது எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்
என்ற குணம் கொண்டவர் பவானி ஸ்ரீ மீது வரும் காதல் அவருடைய காதல் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது
படத்தின் கடைசி அரை மணி நேரம் சூரியின் நடடிப்பிற்கு ஆக்சனுக்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது
இதுதான் சூரிக்கு கிடைத்த மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் என்று சொல்லலாம்
அவரின் சினிமா பயணத்தில் இந்த கதாபாத்திரம் தனித்துவமிக்கது.
டிஎஸ்பியாக கவுதம் வாசுதேவன் நடித்திருக்கிறார் அந்தப் பதவிக்கு கச்சிதமாக நடித்திருக்கிறார்
அவருக்கு கீழ் இபோவாக பணிபுரியும் சேத்தன் தனது நடிப்பை அற்புதமாக வெளிக்காட்டி இருக்கிறார்
சூரியை பார்க்கும்போது அவருக்குள் ஏற்படும் மாற்றம் அவருடைய நடிப்பை வெளிக்கொண்டு வருகிறது.
சூரிக்கு ஜோடியாக மலை கிராமத்து பெண்ணாக பவானி ஸ்ரீ நடித்திருக்கிறார்
தன் பெற்றோரை பறிகொடுத்த சோகத்தை வெளிப்படுத்தக்கூடிய காட்சியில்
நம்மை கண்கலங்க வைக்கிறார்.
விடுதலை படம்
விஜய் சேதுபதி பொருத்தம் வரை காட்சிகள் மிகக் குறைவு தான் அங்கங்கு வந்து போகிறார்
இரண்டாம் பகுதி முழுக்க விஜய் சேதுபதி வருவார் என்று தெரிகிறது படம் முடிந்த பிறகு
இரண்டாம் பகுதிக்கான சில காட்சிகள் எதிர்பார்ப்பை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது.
படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறது காரணம் இந்த படத்தின்
விசாரணை காட்சிகள் மிகவும் வெளிப்படையாக காட்டியிருக்கிறார்கள் சென்சார் செய்யப்பட்ட பின்பும்
அத்தகைய காட்சிகள் இடம் பெற்று இருப்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.
அதனால் தான் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது படத்தின் ஆரம்ப ரயில்
குண்டு வெடிப்பு காட்சிகள் இடைவேளைக்குப் பின் சில காட்சி அமைப்புகள் மட்டுமே படத்தின்
சுவாரசியத்தை அதிகப்படுத்த தவறி இருக்கிறது மித்த இடங்கள் நன்றாகவே அமைந்திருக்கிறது.
இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் இந்தத் திரைப்படத்தின் தன்னுடைய இசையின்
தனித்துவத்தை காட்டியிருக்கிறார் குறிப்பாக பின்னணி இசை ரசிக்க வைக்கிறது
இரண்டு பாடல்கள் மனதை மயக்குகிறது இன்னொரு பாடல் மனதை உருக வைக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது
வெற்றிமாறன் மிகச்சிறந்த இயக்குனர்களின் வருவார் என்பதை அவருடைய
ஒவ்வொரு படங்களிலும் நிரூபித்து காட்டிக் கொண்டிருக்கிறார்.