தமிழ் சினிமா செய்திகள்

கவின் டாடா பட விமர்சனம்

Da Da Full Movie Review லிப்ட் திரைப்படத்திற்கு பிறகு கவின் நடிப்பில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் டாடா
இந்த ஒரு படத்தைகவின் அவருடைய நெருங்கிய கல்லூரி நண்பரான கணேஷ் கே. பாபு என்பவர்
இயக்கி அறிமுக இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

இதில் கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்த அபர்ணாதாஸ் நடித்திருக்கிறார்
மேலும் வீ.டிவி. கணேஷ் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர் இந்த ஒருபடத்தில்.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி மாற்றமா?

தமிழ் சினிமாவில் இதுவரை பல கதைகள் பார்த்திருப்போம் இருந்தாலும்
அதை சொல்கின்ற விதம் தான் ரசிகர்களை ரசிக்க வைக்கும்
திரையரங்கத்திற்கு ஆடியன்ஸை கூட்டி வரும் என்பதில் பலர் உறுதியாக இருக்கின்றனர்.
அதேபோலதான் இந்த ஒரு படமும் முயற்சியை செய்கிறது.

காதலர்களுக்கு இடையில் இருக்கும் ஈகோ தான் படத்தின் மையப் பிரச்சனை 
குழந்தை விவகாரத்தில் பிரிந்து போகிறார்கள் பிரிந்தவர்கள் சேர்ந்தார்களா இல்லையா
என்பதுதான் திரைக்கதையில் இருக்கின்ற சுவாரசியமாக அமைந்திருக்கிறது.

ADVERTISEMENT

கவின் அபர்ணா இருவரும் கல்லூரியில் படிப்பவர்கள் காதலர்கள் ஒருநாள் படுக்கை வரை
அவர்களின் நெருக்கம் போக அபர்ணா  கர்ப்பம் ஆகிறார்
கவின் கர்ப்பத்தை கலைத்து விட சொல்ல அபர்ணா குழந்தை பெற்றே தீருவேன் என்கிறார்.

அதன் பிறகு அபர்ணா தாஸ் மற்றும் கவின் ஆகியோர் உடைய வீடுகளில் இவர்கள் தனித்து விடப்படுகின்றனர்.

Dada Full Film

இருவரும் ஒரு வீடு வாடகைக்கு பிடித்து அங்கு தங்குகிறார்கள்
அவ்வப்போது இருவருக்கும் தொடர்ச்சியாக சண்டை வருகிறது.

ஒரு நாள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை வர ஆஃபீஸ் செல்லும் கவின் கோபத்தில்
மொபைல் ஃபோனை ஆஃப் செய்து விடுகிறார்.
அந்த சமயத்தில் அபர்ணாவுக்கு பிரசவ வலி எடுத்து மருத்துவமனையில் குழந்தை பெறுகிறார்
இரவு வீட்டிற்கு திரும்பிய பின் தான் அபர்ணாவுக்கு என்ன நடந்தது குழந்தை பிறந்ததும் தெரிய வருகிறது.

மருத்துவமனைக்கு ஓடுகிறார் கவின் அங்கு குழந்தை மட்டும் இருக்கிறது
அபர்ணா  இல்லை குழந்தையைக் கூட பார்க்காமல்
பெற்றோருடைய வீட்டிற்கு சென்றது கவினுக்கு தெரிய வருகிறது.

ADVERTISEMENT

இனி இந்த ஜென்மம் முழுவதும் உன்னை மன்னிக்கவே மாட்டேன் என சொல்லி
குழந்தையை அவரோடு வளர்க்க ஆரம்பிக்கிறார் அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதி கதை.

படிக்கும் போது காதல் என்பதே பெரும்பாலான பெற்றோர் எதிர்பார்க்கள் ஆனால் படிக்கும் போதே குழந்தை என்பதே எந்த பெற்றோர் தான் ஏற்றுக்கொள்வார்கள்.

அப்படி ஒரு நிலையில் தான் கவின் அபர்ணா இருவரும் பெற்றோர் ஆதரவு இல்லாமல் நண்பனின் உதவியுடன் தனியே தங்களது வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.

மெச்சூரிட்டி இல்லாத வயதில் குழந்தை வாழ்க்கையை எதிர்கொள்ளும் பிரச்சனை அனைத்தும் அவர்களுக்கு வருகிறது.

நடிகர் கவின் எதையும் கணக்கு போட்டு வாழ்க்கையை நடத்த சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கோபப்படுகிறார் அபர்ணா.

ADVERTISEMENT

அதுவே இவர்கள் இருவரும் புரிவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது கவின் அவர் நான் இருவரும் இதற்கு முன்பு பல படங்களில் நடித்தது போல் நன்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றனர்.

நாம் என்னதான் தமிழ் சினிமாவில் பல கதைகளை பார்த்திருந்தாலும் அதில் கொஞ்சம் மாறுபட்டு இவர்களால் என்ன செய்ய முடியுமோ அதை சரியாக செய்து கொடுத்திருக்கிறார்கள் 

Da Da Full Movie – விமர்சனம்

கவின் அவருடைய நம்பர் ஹரிஷ் மற்றும் வி.டி.வி  கணேஷ் ஆகியோர் இவருக்கு உதவி செய்கிற இடத்தில் பாராட்டப்படுகிறார்கள்.

முழுக்க முழுக்க எதார்த்தமான ஒரு செண்டிமெண்ட் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படத்தை கொடுத்திருப்பது பாராட்ட கூறியது.

கவின் அவருடைய அப்பா அம்மாவிற்கு இந்த படத்தில் பெரிய வேலை இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவருடைய மகன் ரொம்பவே அழகாக காட்சியளிக்கிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் உள்ள லாஜிக் மீறல்கள்  இருக்கத்தான் செய்கிறது படத்தின் கிளைமாக்ஸ் அபர்ணா இன்னும் நன்றாக நடித்து இருக்கணும் அதை அவர் சரியாக செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

படத்திற்கு நடிகர்களை தாண்டி மிகப்பெரிய பலமாக படத்தின் பின்னணி இசை நிக்கின்றது அறிமுக இசையமைப்பாளர் தன்னுடைய பங்களிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.

படத்திற்கான ஒளிப்பதிவாளரும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இவை படத்தை ஒன்று சேர நகர்த்திக் கொண்டு போவதற்கு பெரு உதவியாக இருக்கிறது.

கல்லூரியில் படிக்கும் போது காதலோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த மாதிரி குழந்தை வரை செல்லக்கூடாது என்ற அட்வைஸை ஆணித்தனமாக சொல்லி இருக்கலாம் அதை பல குழு ஏன் தவறவிட்டது என்று தான் தெரியவில்லை.

இந்த மாதிரியான விஷயங்களை கண்டிப்புடன் சொன்னால் மட்டுமே ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் நல்ல ஒரு விழிப்புணர்வாக இருக்கும் அதை படக்குழு செய்ய தவறு இருக்கிறது.

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT