தமிழ் சினிமா செய்திகள்

பத்து தல படத்தின் டீசர் உடன் களமிறங்கும் சிம்பு

Pathu thala Movie நடிகர் சிம்பு அவருடைய நடிப்பில் கடைசியாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி இருந்தது
இந்த படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார் அந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

இதை அடுத்து சிம்பு அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வந்த திரைப்படம்  பத்து தல
இந்தப் படம் கன்னட மொழியில் வெளிவந்து மிகப்பெரிய ஒரு வெற்றி பெற்ற முஃப்தி படத்தின் ரீமேக் தான் பத்து தல.

பத்து தலை படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கேரக்டரில் கேங்ஸ்டாரக  நடித்து இருக்கிறார் இந்த படத்தை வருகிறார் மார்ச் 30ம் தேதி வெளியாகிறது.

அஜித்தின் துணிவு படம் துணிந்து சம்பவம் செய்கிறது.

ஒபுலி என். கிருஷ்ணன் படத்தை இயக்கியிருக்கிறார் இந்த படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக்,
பிரியாபவாணி சங்கர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருக்கின்றனர் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார் 

ADVERTISEMENT

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது ஏற்கனவே சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷலாக சென்ற வருடம் 
பத்து தல படத்தின்  கிளிம்ஸ் வீடியோ வெளியாகி இருந்தது. Pathu thala Movie

Pathu thala Movie Teaser

அதேபோல் இந்த வருடம் சிம்புவின் பிறந்தநாளுக்கு பத்து தல படத்தின் முதல் பாடல் “நம்ம சத்தம்” என்ற பாடல் வெளியாகியிருந்தது
இந்தப் பாடலை ஏ ஆர் ரகுமான் இசையமைத்து அவரே பாடியிருந்தார்.

அந்த ஒரு பாடலுக்கு சிம்பு ரசிகன் மத்தியில் பெரிய வரவேற்பும் கிடைத்திருக்கிறது இதனை தொடர்ச்சியாக பத்து தல படத்தின் டீசரை வெளியிடப்பட முடிவு செய்திருக்கிறதாக தகவல் கிடைத்திருக்கிறது.

வருகிற மார்ச் முதல் வாரத்தில் இருந்து பத்து தலை படத்தின் ப்ரமோசனங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்

பத்து தல புரமோஷனுக்காக சிம்பு தற்போது தயாராகி வருவதாகவும் விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சிம்புவின் மாநாடு வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து கண்டிப்பாக சிம்புவுக்கு மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் மூவியாக இந்த பத்து தல திரைப்படம் அமையும் என்றும் கூறப்படுகிறது.

விரைவில் படத்தின் டீசர் குறித்து  அறிவிப்பு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது அத்தகைய ஒரு அறிவிப்பு வெளிவரும் போது சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு கொண்டாட்டமாக இருக்கும். Pathu thala Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT