தமிழ் சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 ட்ரெய்லர்

Pichaikaran 2 Movie விஜய் ஆண்டனி அவருடைய நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வெளிவந்திருந்தது திரைப்படம் பிச்சைக்காரன்.

இந்தப் படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பாக விஜய் ஆண்டனி  படத்தை தயாரித்திருந்தார். சசி இயக்கி இருந்தார் விஜய் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

 விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்த படத்தில் சாட்னா டியூஸ் பகவதி பெருமாள் தீபா ராமானுஜம் உன்கிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் 2 முதல் பாடல்

பிச்சைக்காரன் படம் வெளிவந்து ரசிகர் மத்தில மிகப் பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது.
படத்திற்கான பட்ஜெட் என்ற பார்க்கும் பொழுது பதினாறு கோடி ரூபாய்கள் ஆனால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை மொத்தமாக
தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சேர்த்து 42 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை வாரி குவிந்திருந்தது.

ADVERTISEMENT

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றிதான் விஜய் ஆண்டனியின் நடிப்புத் திறமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது பொதுமக்கள் மத்தியில் பிரபலம் ஆவதற்கு பிச்சைக்காரன் படம் பெரும் உதவியாக இருந்தது.

அதனால் தான் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை எடுக்க முடிவு செய்தார் இந்த படத்தை பிச்சைக்காரன் படத்தின் முதல் பாகத்தை இயக்கியிருந்த சசி இயக்குனர் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.

 அதன் பிறகு விஜய் ஆண்டனி இந்த படத்தை இயக்கி இந்த படத்திற்கு இசையமைத்து இந்த படத்தை அவரே தயாரித்திருக்கிறார் படத்திற்கான பணிகள் எல்லாம் நிறைவடைந்து படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடியும் தருவாயில் இருக்கிறது.

பிச்சைக்காரன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியிடலாம் என்று  விஜய் ஆண்டனி முடிவு செய்து இருக்கிறார்.

பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்  மலேசியாவில் உள்ள ஒரு தீவில் நடைபெற்ற போது வாட்டர் ஸ்கூட்டியில் செல்வது போல் ஷூட் செய்த போது நிலை தடுமாறி விபத்து ஏற்பட்டது.

ADVERTISEMENT

Pichaikaran 2 Movie – பிச்சைக்காரன் 2

இதில் விஜய் ஆண்டனி அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது முகம் சேதமடைந்தது பலத்த காயத்துடன் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் விஜய் ஆண்டனி.

இதற்கான சிகிச்சைக்கு பின்னர் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தன்னுடைய twitter பக்கம் மூலமாக
அன்பு இதயங்களை நான் 90% குணம் அடைந்து விட்டேன் என்று ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 படத்தில் காணா ஷூட்டிங்கில் கலந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

 இருந்தாலும் அவருக்கு தற்போது சென்னையில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதே வேளையில் ஏப்ரல் மாதம் வெளியாக கூடிய பிச்சைக்காரன் 2 படத்திற்கான பணிகளையும் தொடர்ந்து கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கான முக்கிய அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டிருக்கிறார்.
பிச்சைக்காரன் 2 திரைப்படத்திற்கான ட்ரெய்லரை
இன்று மாலை 5 மணிக்கு ட்ரைலர் மற்றும் ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட போவதாகவும்.

படத்தின் ஓப்பனிங் சீன் நாலு நிமிட காட்சிகளை ட்ரெய்லர்  மற்றும் ஸ்னீக் பீக் வீடியோவாக வெளியிடப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஒரு படத்தின் ஓபனிங் காட்சிகளை வெளியிடுகிறார் என்றால் இந்த படத்தின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார்.
என்பதை காட்டுகிறது அதேபோல் இது போன்ற காட்சிகள் இன்னும் படத்தில் எவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

ADVERTISEMENT

வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக காத்திருக்கின்ற திரைப்படத்திற்கு தற்போது இருந்து ப்ரோமோஷன் களை விஜய் ஆண்டனி தொடங்கி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த படமும் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT