தமிழ் சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச்

PS 2 லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க கூடிய திரைப்படம் பொன்னியின் செல்வன் 2
இந்த படம் மிகுந்த பொருட்கள் உருவாகி இருக்கிறது உலகம் முழுக்க வசூல் ரீதியாக
மிகப்பெரிய ஒரு வசூலை 500 கோடி ரூபாய்க்கு மேல் வாரி குவித்திருந்தது.

அந்த வகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்
மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது ஏற்கனவே படத்திற்கான ரிலீஸ் தேதி
வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது

யாஷிகாவின் கிளாமர் வண்ணமயமாக பல புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்

முதல் பாகத்தைப் பொறுத்தவரை ஒரு சில குறைகள் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு இருந்தாலும்
ரசிகர்கள் பார்க்கும் போது அது எல்லாம் தெரியாத வகையில் மாற்றி இருந்தார் மணிரத்னம்

மேலும் இரண்டாம் பாகத்தை அவர் எப்படி இயக்கி இருப்பார் இந்த மாதிரியான
கதைக்களத்தை கையாண்டு இருப்பார் எந்த மாதிரியான கேரக்டர்கள் அதிகம் பேசப்பட்டிருக்கும்
எவை அதிகம் பேசப்பட்டு இருக்காது என்ற கேள்விகள் ரசிகன் மத்தியில் அதிகமாக ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக ஏப்ரல் மாதம் முதல் பல
முக்கிய ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர் படக் குழுவினர்

ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் அக நக என்ற பாடல் வெளியாகியிருந்தது
அந்த பாடல் கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடித்து இருந்தனர்
மேலும் படத்தின் டிரைலரை வருகிறார் மார்ச் 29ஆம் தேதி வெளியிடப் போவதாக
படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.


PS 2 ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச்

தற்போது மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது
அதன்படி பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாவையும்
ஒரே தேதியில் நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

ஆடியோ லாஞ்சை பொறுத்தவரை மார்ச் 29ஆம் தேதி மாலை 6 மணி அளவில்
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் சென்னையில் நடக்க இருப்பதாக
படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாத காலம் இருக்கின்ற நிலையில்
முன்கூட்டியே படத்திற்கான பிரமோஷன் வேலைகளை படக்குழு ஆரம்பித்திருக்கின்றனர்
பொன்னியின் செல்வன் 2 திரைப் படத்தைப் பொருத்தவரை பல முக்கிய பிரமோஷன் களை
கையில் எடுக்க பட குழு முடிவு எடுத்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக இந்த படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் நடிகைகள்
அனைவரையுமே பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள வேண்டும் என்று
ஏற்கனவே நிபந்தனையும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்து
500 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை பெற்றிருந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2
திரைப்படம் அதை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றனவாம்
ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பாடல்கள்
அனைத்தும் ரசிகர்களுடைய கவனத்தை எடுத்திருந்த நிலையில்
இரண்டாம் பாகத்தின் பாடல்களும் நிச்சயம் ரசிகர்களை கவரும் வண்ணமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ட்ரெய்லர் மற்றும் ஆடியோ லான்ச் நடக்கின்ற தேதியில் இந்த படத்தில் நடித்த
அத்தனை நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொள்வார்கள் என்றும் மிகப் பிரமாண்டமான
ஒரு ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் லாஞ்ச் ஆக இது இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT