தமிழ் சினிமா செய்திகள்

எவ்வளவு கொடுத்தாலும் இனி அவருடன் நடிக்க மாட்டேன்

Nayanthara தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் நடிகை நயன்தாரா அவர் இனி அஜித் ஜோடியாக நடிக்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார் என்ற தகவல் வந்திருக்கிறது.

தமிழ் திரை துறையில் முன்னணி நடிகையாக பலம் வரக்கூடியவர் நடிகை நயன்தாரா நடிகை நயன்தாராவும் விக்னேஷ்
கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற முடிந்தது திருமணம் செய்து இருந்தாலும்.
தொடர்ந்து சினிமா படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார்.

நடிகை நயன்தாரா கைவசம் தற்போது பல படங்கள் இருக்கிறது.
குறிப்பாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்  மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது என்றும்.
அந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

நாளை வெளி வருகிறதா அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு

பல படங்களில் நடித்து வந்தாலும் தற்போது அவர் செம அப்சட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு காரணம் நடிகர் அஜித் என்றும் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக
ஏற்கனவே லைக்கா ப்ரோடுக்ஷன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

விக்னேஷ் சிவன் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தது நயன்தாரா தான் என்றும் கூறப்பட்டது.
அவர் அஜித்திடம் பேசியதன் மூலம் தான் விக்னேஷ் இவனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன.

படத்திற்கான திரைக்கதையை தயார் செய்து விக்னேஷ் சிவன் இயற்கை  அஜித்தின் 62 வது படத்தை இயக்க தயாராகி வந்த நிலையில் தான்  இறுதியில் திடீரென படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாக இருந்தது. 

Nayanthara – நயன்தாரா

அஜித்தின் 62 ஆவது படத்தில் தான் இல்லை என்பதை அண்மையில் விக்னேஷ் சிவனும் உறுதி செய்துதிருந்தார்.
அவர் சொன்ன கதை அஜித்துக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் திருப்தி அளிக்காத காரணத்தால் அவரை அந்த படத்தில் இருந்து  நீக்கி விட்டு அவருக்கு பதிலாக மகிழ்ந்திருமேனியை ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் ஆரம்பிக்க தயாரான  நிலையில் விக்னேஷ் சிவனை ஏ கே 62 படத்திலிருந்து நீக்கியதால் நடிகர் அஜித் மீது செம கோபத்தில் உள்ளாராம் நயன்தாரா.

இதனால் தான் நயன்தாரா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது அதன்படி இனி எத்தனை கோடிகள் கொடுத்தாலும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கப் போவதில்லை என்கிற கு முடிவுக்கு நயன்தாரா வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கு முன்பு நடிகர் அஜித்தும் நடிகை நயன்தாராவும் இணைந்து பல படங்களை பணியாற்றி இருக்கின்றன. அந்த வகையில் பில்லா ஏகன் ஆரம்பம் விஸ்வாசம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கின்றனர்

இப்படிப்பட்ட தகவல்களை எல்லாம் ஒருபுறம் வெளிவந்து கொண்டிருந்தாலும் இதுவரை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எந்த விதமான அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT