கோட் படத்திற்கான முதல் பாடல்
Goat தளபதி விஜய் அவருடைய நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் தற்போது உருவாகி வருகிற திரைப்படம்
தி கிரேட் ஸ்டாப் ஆல் டைம் என்று சொல்லக்கூடிய கோட்
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் பொறுத்தவரை கேரளா சென்னை ஹைதராபாத்துக்கு
உள்ளிட்ட இடங்களில் படத்தை காண ஷூட்டிங் என்பது நடந்து முடிந்திருக்கிறது.
அரசியலுக்கு வர போவதாக நடிகர் விஷால் அறிவித்திருக்கிறார்
கடைசியாக கேரளாவில் தொடர்ந்து ஆறு நாட்கள் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று முடிந்திருக்க நிலையில் அங்கு ரசிகர்கள் தளபதி விஜய் அவருக்கு மிகுந்த ஒரு வரவேற்பையும் உற்சாகத்தையும் அளித்திருந்தனர்.
கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி,
உள்ளிட்ட பலர் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் பல வருடங்களுக்குப் பிறகு
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் சென்னையில் இருந்து துபாய் வழியாக மாஸ்கோ புறப்பட்டு சென்றிருக்கிறார்
அங்கு தான் இந்த ஒரு கோட் திரைப்படத்திற்கான கிளைமேக்ஸ் காட்சிகளை
படக்குழு இரு வாரங்களுக்குள் நடத்தி முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 15 நாட்களில் முடிக்க படக்குழு முடிவு செய்து தற்போது வெளிநாட்டில்
படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.
Goat – The Greatest Of All Time – Whistle Podu Song
அதே வேளையில் விஜய் அவர்கள் நடித்திருக்கக் கூடிய கோட் திரைப்படத்திற்கான முதல் பாடலை
நேற்று பட குழுவினர் தமிழ் புத்தாண்டை ஸ்பெஷலாக வெளியிடப் போவதாக
முந்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
அவர்கள் சொன்னது போல் நேற்று திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருந்தது படத்திற்கு
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார் இந்த பாடலை தளபதி விஜய் அவர்கள் பாடியிருந்தார்
விசில் போடு என்று பாடல் வரிகள் அமைந்திருந்தது.
ஆனால் பாடல் ரசிகர்கள் மத்தில் மிகப்பெரிய அளவில் திருப்திப்படுத்தி இருந்ததா என்றால் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
இந்த பாடல் வெளிவந்த பிறகு தளபதி விஜய் அவருடைய ரசிகர்களுடைய மனநிலை வேறு மாதிரி ஆக மாறிவிட்டது.
ஆனால் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் இருக்கும் மிகப்பெரிய ஒரு கொண்டாட்டத்துக்கான புத்துணர்ச்சியை
கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள்.
அவர்கள் அத்தனை பேருக்கும் மிகப்பெரிய ஒரு சோதனையாகவே இந்த பாடல் அமைந்தது பாடலில்
தளபதி விஜய்யின் வாய்ஸில் எனர்ஜி என்பது இல்லாதது போல் இருந்தது பாடலின் மியூசிக் அதிகமாக இருப்பது போல் இருந்தது .
ஒட்டுமொத்தமாக பல வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் யுவன் சங்கர் ராஜா காம்போ என்று மிகுந்த
எதிர்பார்ப்பில் இந்த பாடலை ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள்
அனைவருக்குமே இந்த பாடல் சற்று ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
மற்றொருபுறம் ஒரு சில ரசிகர்களுக்கும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களும் இந்த பாடல் நன்றாக இருக்கும்
போகப்போக மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும் என்று கூறி வருகிறார்கள்
ஆனால் அதிகப்படியான ரசிகர்களுக்கு இந்த பாடல் திருப்தி இல்லை அதுவும் கோட் என்று படத்திற்கு
தலைப்பு வைத்துவிட்டு இந்த மாதிரியான பாடல் எப்படி செலிப்ரேஷன் பண்ண முடியும்
என்ற மனநிலையில் இருக்கிறார்கள் தளபதி விஜயின் ரசிகர்கள்.
இதோ அந்தப் பாடல்