வேட்டையன் திரைப்படம் கதாபாத்திரம் பற்றி கூறிய பகத் பாசில்
Vettaiyan சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய நடிப்பில் தற்போது உருவாகி வருகின்ற திரைப்படம் வேட்டையன்
இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கியிருந்த ஞானவேல் இயக்குகிறார் இந்த படம் ஒரு ரியல் ஸ்டோரி என்றும் கூறப்படுகிறது
ஏற்கனவே ரிட்டயர் ஆன போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமிதாப் பச்சன் பகத் பாஸில் ராணா மஞ்சு வாரியர் உள்ளிட்ட
பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றன இந்த படத்தை லைக்கா தயாரிக்கிறது
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
வேட்டையன் திரைப்படம் சம்பந்தப்பட்ட தகவல்களை இந்த படத்தில் நடிக்க கூடிய பகத் பாஸில்
தன்னுடைய கேரக்டர் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தெரிவித்து இருக்கிறார்.
Vettaiyan Tamil Movie
இந்த படத்தில் நடிப்பதற்கு நான் ஒப்புக்கொள்ள முக்கிய காரணம் இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
திரைப்படம் ஆனால் அந்த கேரக்டர் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை
நான் விக்ரம் படத்தில் நடித்திருந்தேன் விக்ரம் படத்தில் கமலஹாசன் அவருக்கு இணையான ஒரு கதாபாத்திரமாக
நான் நடித்திருந்தேன். அனைத்து ரசிகர்களுக்கும் அது பிடித்திருந்தது.
அதேபோலத்தான் மாமன்னன் திரைப்படத்திலும் நல்ல ஒரு நெகட்டிவ்வான ரோலில் நடித்திருந்தேன்
தொடர்ச்சியாக வில்லன் மற்றும் நெகட்டிவ் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன்.
ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் நான் ஒரு காமெடியனாக நடிப்பேன் என்பது எனக்கு ஒப்பு கொள்ளாத விஷயமாக இருந்தது
பின்பு அந்த கேரக்டர் சம்பந்தப்பட்ட முழு கதையும் கேட்ட பின் பிறகு தான் எனக்கு மிகப்பெரிய ஒரு திருப்தி
நல்ல கதாபாத்திரம் என்பதை உணர்ந்தேன் என்றும் பகத் பாஸில் தெரிவித்திருக்கிறார்
இவர் இந்த படத்தில் வில்லனாக நடிப்பார் என்று தான் எதிர்பார்த்தார்கள் தற்போது
காமெடி கலந்த ஒரு கதாபாத்திரத்தில் தான் நடித்து வருவதாக பகத் பாஸில் தெரிவித்திருக்கிறார்.
வேட்டையன் திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று படக்குழு
ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றது.