தல அஜித் துணிவு பட விமர்சனம்
Thunivu தல அஜித் எச் வினோத் போனி கபூர் கூட்டணியில் நேற்கொண்ட பார்வை வலிமை ஆகிய படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இதே கூட்டணியில் உருவாகி தற்போது வெளியாகி இருக்கின்ற திரைப்படம் துணிவு
கடைசியாக வெளியாகி இருந்த வலிமை படம் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது அதை எச் வினோத் தற்போது துரிதமாக கையாண்டு
துணிவு படத்தை கொடுத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் தனா அஜித் ரசிகர்களுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார்
துணிவு வாரிசு படத்துக்கு சிறப்புக் கட்சி இல்லை
படத்தில் எச் வினோத் காட்சிக்கு காட்சி தல அஜித் அவர்கள் உச்சரிக்கும் டயலாக் திரையரங்கை அதிர வைக்கிறது அதிரடி காட்சியில் அஜித் மிரட்டி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
சில இடங்களில் அஜித் டூப் போட்டு நடித்து இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில் அதற்கெல்லாம் பதிலடியாகா எங்கேயும் டூப் போடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறதுசண்டை காட்சிகள் அனைத்தும்
மேலும் அஜித் மைக்கேல் ஜாக்சன் போல் நடனம் ஆடும் காட்சியில் திரையரங்கும் சேர்ந்து நடனம் ஆடுகிறது நடிகர் அஜித்திற்கு ஆட தெரியாது என்று கூறியவர்கள் வாயை அடைக்க வைத்திருக்கிறார் எச் வினோத்
Thunivu movie Review
மைக்கேல் ஜாக்சன் போல் செம சூப்பராக நடனமாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார்
அஜித் மேலும் பல வருடங்களுக்குப் பிறகு ஹியூமர் சென்சாரில் பூந்து விளையாடி இருக்கிறார் அஜித்
அஜித் நடனம் ஆடும் போதெல்லாம் ரசிகர்கள் திக்கு முக்காடுகிறார்கள் கண்டிப்பாக ஆட்டநாயகன் விருது இந்தப் பொங்கலுக்கு அஜித்திற்கு தான் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்
திரைத்துறையினரும் ரசிகர்களும் அந்த அளவிற்கு தரமான பொங்கல் விருந்தை தன் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் தல அஜித்
சென்னையில் பிரபலமாக இருக்கக்கூடிய யுவர்ஸ் பேங்க் என்ற பேங்கில் இருந்து 500 கோடி கொள்ளை அடிக்க உதவி கமிஷனர் சிலரும் திட்டம் தீட்டுகின்றனர்
அவர்கள் கொள்ளை அடிக்கச் சென்ற அதே பேங்கில் சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜித் சென்று அந்த கொள்ளையர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்
அவரைப் பிடிக்க போலீஸ் கமிஷனரான சமுத்திரக்கனி தலைமையில் ஒரு டீம் அமைக்கப்பட்டு அஜித்துடன் பேச்சு வார்த்தை தொடர் நடத்தப்படுகிறது.
ஆனால் உண்மையிலேயே அந்த பேங்கில் கொள்ளை அடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் அஜித்
Ajith
முழுக்க முழுக்க அஜித்தை வைத்து புது ஒரு அதிரடியான ஆக்சன் கதையில் வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களை எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள்.
கொள்ளையடிக்கிறார்கள் என்பதை படத்தின் மையக் கருவாக அமைந்திருக்கிறது
ம்யூச்சுவல் ஃபண்ட் மினிமம் பேலன்ஸ் கிரெடிட் கார்டு என பல விஷயங்களை மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் துன்பப்படுகிறார்கள்
என படம் பார்ப்பவர்களுக்கு சேர்த்தும் கொஞ்சம் துணிவுடன் துணிச்சலாக பாடம் நடத்தப்பட்டிருக்கிறது இந்த துணி படம்
பில்லா மங்காத்தா படத்திற்கு பிறகு ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கலக்கி இருக்கிறார் தல அஜித் சர்வதேச கேங் ஸ்டாராக அஜித்
படத்தை ஆரம்பித்த சிறுது நேரத்தில் சிறப்பான தரமான என்ட்ரி அதிரடியாக ஆரம்பமாகிறது
அந்த அதிரடி காட்சிகள் முழுக்க முழுக்க அப்படியே கதைக்களத்தின் நகர்ந்து சென்று படம் முடியும் வரை இருப்பது தான் படத்தின் மிகப்பெரிய ஒரு பலமாக பார்க்கப்படுகிறது
இப்படி ஒரு ஸ்டைலிஷ் பர்பாமென்ஸ் அஜித்திடம் கடந்த சில படங்களில் பார்த்ததில்லை என்று சொல்லலாம்
அந்த அளவிற்கு ஸ்கிரீன் பெர்பார்மன்ஸ் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் அஜித்
Thunivu pongal
மேலும் படத்தில் நடித்திருக்கக்கூடிய மஞ்சுவாரியருக்கு இப்படிப்பட்ட கதைகள் இப்படி ஒரு முக்கியமான கதாபாத்திரமா என்று ஆச்சரியப்பட வைக்கின்ற அளவிற்கான.
கதாபாத்திரம் நடிகை மஞ்சு வாரியரும் அவருக்கான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார்
மேலும் மைபா சமுத்திரகனி உள்ளிட்டோர் அவர்களுக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள்
துணிவு திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் எல்லாமே குறிப்பிட்ட வங்கியில் நடைபெறுவதாக காட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த குறிப்பிட்ட செட்டில் பேங்க் உள்ளே என்ன நடக்கும் இவ்வாறு அதை காட்சிப்படுத்த முடியும் என்பதையே படத்தின் இயக்குனர் வினோத் தெள்ளத் தெளிவாக எழுதி இருக்கிறார்
அவருடைய எழுத்து தான் காட்சி அமைப்புகளாக கண் முன்னாடி வந்து நிற்கிறது படத்தின் முதல் பகுதி ராக்கெட் ஸ்பீடில் பறக்கிறது.
இரண்டாம் பகுதியில் சமூக பிரச்சனையும் எடுத்து கையாண்டு இருக்கிறாள் வினோத் ரொம்பவே சூப்பராக நீட் அண்ட் ஸ்வீடாக சொல்லி இருக்கிறார்
படத்தின் கேமரா மேன் நிரவ்ஷா அவரின் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாகவே கையாண்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்
அதேபோல் படத்திற்கு ஜிப்ரன் இசையமைத்திருக்கிறார் ஜிப்ரனின் பின்னணி இசை துணிவு படத்தின் கதைக்களத்தை நகர்த்துவதற்கு நல்ல உறுதுணையாக இருக்கிறது.
மேலும் பாடல்கள் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. குறிப்பாக கேங்ஸ்டா என்ற பாடல் அஜித் ரசிகர்களை மேலும் உற்சாகமடைய வைத்திருக்கிறது.
அஜித்தை இந்த அளவுக்கு ஸ்டைலிஷ்சாக காட்ட முடியுமா என்று ரசிகர்களே வியக்கும் அளவிற்கு அந்த பாடல் இருந்தது
துணிவு திரைப்படத்தின் வங்கிக் கொள்ளக் காட்சிகளில் எடிட்டிங் விஜய் வேலுகுட்டி அருமையாக எடிட்டிங் கையாண்டிருக்கிறார்
அதேபோல் படத்தில் தேவையில்லாத சில விஷயங்களை இருக்கத்தான் செய்திருந்தது எவ்வளவு துப்பாக்கி குண்டுகள் அதிகம் பயன்படுத்தப்பட்டது என்பது தெரியாது.
எவ்வளவு பேர் சுட்டாலும் ஹீரோவுக்கு எதுவும் ஆகாது என்று வழக்கமான அந்த ஹீரோயிசம் இந்த படத்திலும் உண்டு
லாஜிக் மீறல் படத்தில் இருக்கத்தான் செய்கிறது தேவையற்ற காட்சிகள் என்று நாம் எதுவும் சொல்ல முடியாது
எதற்காக அவர்கள் வங்கியை கொள்ளை அடித்தார்கள் என்று கூறக்கூடிய பிளாஷ்பேக் காட்சிகளை கூட சுருக்கமாக சொல்லி முடித்திருக்கிறது படத்திற்கு பலம்,
வங்கியில் தரும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் கண்ண மூடிக்கொண்டு கையெழுத்து போடக்கூடாது இதனால் பேராசை பட்டால் பெரும் நஷ்டம் அடைய வேண்டும் என்பதை இந்த துணிவு படம் சரியாக சொல்லி இருக்கிறது.
பணத்திற்காக பேராசைப்பட வேண்டாம் என்று கடைசியாக சொல்லி ஒரு அழுத்தமான மெசேஜை மக்களிடம் சொல்லி முடித்திருக்கின்றனர்.