தமிழ் சினிமா செய்திகள்

லியோ படம் குறித்து பகிர்ந்த மிஸ்கின்

Leo Movie நடிகர் விஜய் நடிப்பில் கடைசி ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷல் ஆக வெளிவந்திருந்த திரைப்படம் வாரிசு இந்த ஒரு திரைப்படம் வெளிவந்த ரசிகர் மத்தியில் கலப்பையான விமர்சனத்தை எதிர்கொண்டு இருந்தது.

கலவையான  விமர்சனத்தை எதிர்கொண்டாலும் இந்த படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக படத்துடைய தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

இதனை அடுத்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகி வருகிற திரைப்படம் லியோ.

லியோ திரைப்படத்தின் சூட்டிங் முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார் இயக்குனர் மிஷ்கின் இது குறித்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக  வலம்  வரக்கூடிய மிஷ்கின் அவர் அஞ்சாதே யுத்தம் செய் பிசாசு துப்பறிவாளன் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் மிஷ்கின்

ADVERTISEMENT

அஜித்தின் 62 ஆவது படம் தாமதம் ஏன் ?

தற்போது கோலிவுட்டில் பிஸியான இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் கடைசியாக இயக்கி இருக்கக்கூடிய பிசாசு திரைப்படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக காத்திருக்கிறது.

இயக்குனர் மிஷ்கின் அவருக்கு வில்லன் வேடங்கள் குவிந்து வருகிறது ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க கூடிய மாவீரன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்
தற்போது லியோ திரைப்படத்தில் இவர் நடிக்கக்கூடிய கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாக அவர் தெரிவித்திருக்கிறார் மேலும் அவர் சொல்லும் போது

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் மிஷ்கின் என்றும் கூறப்படுகிறது காஷ்மீரில் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வந்தது இன்று சென்னை திரும்பி இருக்கின்ற மிஸ்கின் லியோ பட அனுபவங்களை அறிக்கை மூலம் அறிவித்திருக்கிறார் அந்த ஒரு அறிக்கையில்

இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்புகிறேன் மைனஸ் பன்னிரண்டு டிகிரி 500 பேர் கொண்ட லியோ பட குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.

ADVERTISEMENT

லியோ – Leo Movie

மாஸ்டர் கல் அன்பறிவு மிகச் சிறப்பான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினார்கள் அசிஸ்டன்ட் இயக்குனர்களின்
ஓயாத ஒழிப்பும் என் மேல் அவர்கள் செலுத்திய அன்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

படத்தின் தயாரிப்பாளர் லலித் அந்த குளிரிலும் ஒரு சக தொழிலாளியாக உழைத்துக் கொண்டிருந்தார்.

என் லோகேஷ் கனகராஜ் ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குனராக அன்பாகவும் கண்டிப்பாகவும் ஒரு சிந்தனையுடன்
ஒரு பெரும் வீரனை போல் களத்தில் இயற்கை கொண்டிருந்தான்.

என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத் தழுவினால் அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.
என்அருமை தம்பி விஜயுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன்
அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தை அவர் அன்பையும் நான் என்றும் மறவேன்

லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடையும் இவ்வாறு அந்த ஒரு அறிக்கையில் இயக்குனரும் நடிகருமான  மிஷ்கின் குறிப்பிட்டு இருக்கிறார். Leo Movie

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT