பத்து தல படம் எப்படி இருக்கு
Pathu Thala சிம்பு அவருடைய நடிப்பில் ஒபிலி கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்க திரைப்படம்
பத்து தல படத்தின் கதை என்று பார்க்கும் பொழுது
ஆரம்பத்திலேயே முதலமைச்சர் நபர்களா கடத்தப்படுகிறார் முதலமைச்சரை யாரு கடத்தினார்கள்
ஏன் கடத்தினார்கள் என்பதை தெரிந்து கொள்ள அண்டர்கவர் ஆபரேஷனில்
ஒரு போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார்.
அதன் பிறகு அந்த போலீஸ் அதிகாரிக்கு என்ன என்ன தகவல்கள் கிடைக்கிறது
என்பதை படத்தின் கதையை படக்குழு தீர்மானித்திருக்கிறது.
மிகப்பெரிய ஒரு பலம் என்று பார்க்கப் போனால் சிம்பு என்று கண்டிப்பா நீங்க சொல்லிதா ஆகணும்
அந்த ஏஜிஆர் அப்படிங்கற அந்த ரோளுக்கு அவ்ளோ பெரிய பலமாக இருந்திருக்காரு
அட்டகாசம் பண்ணி இருக்காரு அப்படித்தான் சொல்லணும்
கொடுத்த வேலையை மிகக் கச்சிதமாக முடித்திருக்கிறார்.
சங்கர் & ராம்சரண் பட டைட்டில் அறிவிப்பு
சிம்புவை பொருத்தவரை படத்தின் இடைவேளைக்கு முன்பாக மட்டுமே வருவது
அவருடைய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் என்று தான் சொல்ல வேண்டும் ரீமேக் செய்யும் போது
அதை மாற்றி அமைத்து இருந்தால் இன்னும் தரமாக இருந்திருக்கும்.
படத்தின் ஆரம்பம் முதல் நடிகர் சிம்புவை காட்டாமல் அவர் இருக்கிறார் என்ற முனைப்பிலேயே
கதைக்களம் நகர்கிறது இடைவெளிக்கு முன்பாக சிம்புவின் அதிரடி என்று ஆரம்பம் ஆகிறது
அவருடைய ராஜ்ஜியம் தொடர்கிறது.
சிம்பு யார் என்பது பார்ப்பவர்களுக்கு தெரிய வரும் போது அவர் மீது நமக்கு பெரும்
அனுதாபம் ஏற்பட வேண்டும் அதை அழுத்தமாக பதிவு செய்ய தவறு இருக்கிறார் இயக்குனர்.
சிம்புவிற்கு அடுத்தபடியாக இந்த படத்தின் மிகப்பெரிய ஒரு கதாபாத்திரம் என்றால்
அது கௌதம் கார்த்திக் மற்றும் கவுதம் வாசுதே மேனன் இருவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை
மிக கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்கள் .
அடுத்ததாக பிரியா பவானி சங்கர் தாசில்தார் வரக்கூடிய அவர் அவருடைய
கதாபாத்திரத்தை மிக சூப்பராக செய்திருக்கிறார் கௌதம் கார்த்தியின் காதலியாக வலம் வருகிறார்
ஆனாலும் அந்த கதாபாத்திரம் மிக அழுத்தமாக சொல்லப்படவில்லை.
படத்தின் துணை முதல்வராக இருக்கும் கௌதம் மேனன் படத்தின்
மெயின் வில்லனாக இருக்க வேண்டும் ஆனால் மெயின் வில்லனாக சிம்புவின் நெகட்டிவ்
கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் படத்தில் துணை வில்லன்களாக தான் கௌதம் மேனனை பார்க்க முடிகிறது.
வழக்கம் போல இந்த ஒரு திரைப்படத்திலும் சிம்புவின் அடியாள்களாக சில துரோகிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்
இந்த படத்தின் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கு குறிப்பாக
சிம்பு உடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்தாக அமைந்திருக்கிறது.
Pathu Thala – பத்து தல எப்படி
இந்த படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும் இந்த படம் ஏற்கனவே
கன்னட மொழியில் வெளியாகி இருந்த மப்டி படத்தின் ரீமேக் என்பது நமக்கு தெரியும்
கதைக்களத்தை மேலும் சுவாரஸ்யப்படுத்தி சிம்பு ரசிகர்களை மேலும் திருப்திப்படுத்தி இருந்தால்
இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்திருக்கும்
அதிலிருந்து சற்று விலகி நிற்கிறது பத்து தல.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பின்னணி இசையில் பட்டை தீட்டிருக்கிறார்
என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பின்னணி இசை மிக அற்புதமாக இருந்தது
படத்தின் பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும் ராவடி பாடல் கண்டிப்பாக ரசிகர்களை கவர்ந்திருக்கிறது
இருந்தும் அந்தப் பாடல் இந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று வைத்தது போல் தெரிகிறது.
படத்தின் கேமரா மேன் அவர் இந்த திரைப்படத்தின் காட்சி அமைப்புகளை கையாண்ட விதம்
உண்மையாகவே ரசிக்கும்படி இருந்தது கிளைமாக்ஸ் காட்சி அமைப்புகள் எல்லாம்
மிகக் கச்சிதமாக இருந்தது பிரேம் எல்லாம் ரசிகர்களுடைய ரசனை தூண்டும் விதமாக அமைந்திருந்தது.
இந்தப் படத்தில் பல நம்பமுடியாத சில காட்சி அமைப்புகள் பார்க்க முடிகிறது அதை
சிம்பு செய்யாமல் இருந்தது உண்மையாகவே பாராட்டும்படி இருந்தது
சிம்புக்கு பதிலாக அந்த காட்சிகளில் நடித்தவர் கௌதம் கார்த்திக்
திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் இன்னும் கவனம் செலுத்தி இருந்தால்
படம் நன்றாக வந்திருக்கும் இடைவேளைக்கு பிறகு தான் சிம்புவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
முதல் பாதையில் முடிந்தவரை சிம்புவை திரைக்கதையில் கொண்டு வந்திருந்தால்
இந்த படத்தில் சிம்புவின் அந்த மாஸ் ஆக்சன் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்தாக அமைந்திருக்கும்
ஆனால் முழு விருந்தாக இந்த பத்து தல படத்தில் அது அமையவில்லை
ஆனாலும் இந்த படத்தின் இரண்டாம் பகுதி சிம்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு விருந்து என்பதை
மீண்டும் ஒரு முறை ஆணித்தனமாக சொல்லிக் கொள்கிறோம்
அதற்கு முதல் பகுதியை கடக்க வேண்டிய நிலை இருக்கிறது.