தமிழ் சினிமா செய்திகள்

மாவீரன் படத்துக்கு தொடரும் சிக்கல்

maaveeran நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய நடிப்பில் கடைசியாக தீபாவளி ஸ்பெஷலாக வெளிவந்திருந்த திரைப்படம் பிரின்ஸ் 

இந்த ஒரு திரைப்படம் வெளிவந்து ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டு இருந்தது.

சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.

அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவன் நயன்தாரா சொல்லியும் கேட்காத லைக்கா

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார் மிஸ்கின் இந்த ஒரு திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கின்றார்.

ADVERTISEMENT

மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த பிரின்ஸ் திரைப்படத்திற்கு 

தெலுங்கில் நல்ல வரவேற்பும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஒரு ஓபனிங் கிடைத்திருந்தது.

மாவீரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் அவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் படம் பிடிப்பு நடைபெற்ற போது இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஒருவழியாக இருவரிடமும் தயாரிப்பு நிறுவனம் பேசி இருவரையும் சமாதானப்படுத்திய பிறகு படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் மீண்டும் ஆரம்பமானது.

ADVERTISEMENT

ஏற்கனவே படம் பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குனருக்கும் ஒத்துவரவில்லை.

 இந்த படம் முடிக்கப்படுமா என்ற கேள்விகள் வைக்கப்பட்டு இருந்ததற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஏற்கனவே மாவீரன் திரைப்படத்திற்காக சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டதில் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதனால்தான் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

சிவகார்த்திகேயன் தற்போது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒவ்வொரு காட்சிகளையுமே அவர் கவனிப்பதாகவும் அவருக்கு திருப்தி இருந்தால் மட்டுமே அவர் ஓகே சொல்வதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மாவீரன் – Maaveeran

இதனால் தான் தற்போது மாவீரன் திரைப்படத்திற்கான சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும்

அந்தப் பணிகள் எல்லாம் நிறைவடைந்த பிறகு தான் மாவீரன் திரைப்படத்திற்கான ரிலீஸ் திரையை படக்குழு அறிவிப்பார்கள் என்றும் தகவல் வெளிவந்திருக்கின்றது.

அதே வேலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாக இருக்கின்றது

மாவீரன் திரைப்படத்திற்கு பைனான்ஸ் செய்து வந்த அன்புச் செழியன் விலகியதாக சொல்லப்படுகிறது.

மாவீரன் திரைப்படத்தின் சில காட்சிகளை ரீ ஹூட் செய்ய உள்ளதாகவும் அதற்காக ரீ ஹூட்டிங் முடிய அதிக நாட்கள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

 இதன் காரணமாகவே இந்த படத்திற்கு பைனான்ஸ் செய்து வந்த கோபுரம் சினிமாஸ் நிறுவனர் அன்புச் செழியன் மாவீரன் திரைப்படத்திலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

அதனால் வேறு ஒரு நிறுவனம் மாவீரன் படத்துக்கு பைனான்ஸ் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த கடைசியாக வெளியாகி இருந்த பிரின்ஸ் திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தான் வெளியிட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த ஒரு படம் இவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லை  தற்போது மாவீரன் படத்திலிருந்து அன்புச் செழியன்  விலகி இருப்பது சிவகார்த்திகேயனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT