தமிழ் சினிமா செய்திகள்

இரண்டு பாகங்களாக வெளி வரும் விடுதலை

viduthalai இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் விடுதலை இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கின்றனர் இந்த படத்தில் சூரி போலீஸ் அதிகாரியாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு ஆசிரியராகவும் நடித்திருக்கின்றனர்

ஏற்கனவே இந்த விடுதலை திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது திண்டுக்கல் இருக்கக் கூடிய மலைப்பகுதிகளில் தான் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வந்தது

விஜயின் வாரிசு படத்தின் முதல் பாடல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்திற்கான அனைத்து படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்தது என்றும் சொல்லப்பட்டது தற்போது மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது அதே போல் இன்று படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் பிறந்த நாள் என்பதால் படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது viduthalai

விடுதலை திரைப்படத்தை தமிழகம் முழுக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடப் போவதாகவும் இந்த விடுதலை படம் மொத்தம் இரண்டு பாகங்களாக வெளி வரப்போகிறது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது இந்த அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்று சொல்லலாம் 

ADVERTISEMENT

மேலும் இந்த விடுதலை திரைப்படத்தை பற்றி படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியபோது படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் எல்லாமே அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் தொடர்ச்சியாக சூட்டிங் செய்யப்படுவதும் வழக்கமாக ஒரு நாட்களில் முடிக்கப்பட வேண்டிய சூட்டிங் காட்டுக்குள் நடப்பதால் இங்கு இரண்டு மூன்று நாட்கள் தேவைப்படுகிறது அதனால் தான் இந்த தாமதம் தொடர்ச்சியாக நடந்தது என்று வெற்றிமரன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT