தமிழ் சினிமா செய்திகள்

மீண்டும் சாதனை படைத்த அஜித் குமார்

Ajith kumar அண்மையில் நடிகர் அஜித் குமார் அவர்களுடைய திரைப்படம் வெளிவந்து
ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும் 
மிகப்பெரிய வருகிறது இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர் அஜித்குமார் பெல்ஜியம் நாட்டில் நடைபெறும் ஜி டி 4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில்
இரண்டாவது இடம் பிடித்து சாதித்திருக்கிறார்

இது தொடர்பான தகவலை அஜித் குமார் ரேசிங் 
அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

என்னை கடவுளே அஜித்தே என்று அழைக்க வேண்டாம்

ஏற்கனவே துபாயில் துபாயில் நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடமும் இத்தாலியில் 
நடைபெற்ற போட்டியில் மூன்றாவது இடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.

இது துபாயில் நடைபெற்ற கார் ரேசிங் போட்டியை பொறுத்தவரை 24 மணி நேர போட்டி
அதேபோல் இத்தாலியில் நடைபெற்ற போட்டி என்பது 12 மணி நேரம் போட்டியாகும்

ADVERTISEMENT

Ajith Racing Updates

 இந்த நிலையில் தற்போது பெல்ஜியத்தில் நடைபெற்ற போட்டியில்
அஜித் குமார் ரேசிங் அணி இரண்டாவது இடம் பிடித்து
உலக அளவில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்திருக்கிறது.

நடிகர் அஜித்குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அக்டோபர் மாதம் தொடர்ந்து கார் ரேசிங் ஈடுபட்டு வருகிறார் 

அதற்கு ஏற்ற வகையில் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகி இருக்கிறார் ஆனால்
இவருடைய நடிப்பில் இதுவரை இரண்டு திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது

இதில் விடாமுயற்சி திரைப்படம் விமர்சனம் ரீதியாக வெற்றி பெற்று இருந்தாலும்
வசூல் ரீதியாக அந்த படம் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

குட் பேட் அக்லி திரைப்படத்தை பொறுத்தவரை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய
ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லலாம்

திரைப்படம் வெளியாகி 11 நாட்களை கடந்திருக்கும் நிலையில் படம் 250 கோடி ரூபாய்க்கு மேல்
வசூலித்து மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பல ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்து இந்த குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.

குட் பேட் அக்லி  திரைப்படம் வெளிவந்து ரசிகர்களுடைய கவனத்தை ஈர்த்திருந்தாலும்
நடிகர் அஜித்தின் கவனம் முழுக்க முழுக்க

ஜிடி 4 ஐரோப்பிய கார் ரேஸ் பந்தயத்தில் இருக்கிறது.
இந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள தனது பெயரில்
அஜித் குமார் ரேசிங் அணி என்ற அணியை உருவாக்கியுள்ளார் .

ADVERTISEMENT

Ajith Kumar Car Racing

மேலும் கார் ரேஸில் கலந்து கொண்டு அஜித் குமார் மிகவும் சீரியஸாகவும் சிறப்பாக உடலை
மெருகேற்றிக் கொண்டு உடல் எடையை குறைத்துக் கொண்டு
தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தான் துபாய் ரேசில் ஈடுபட்டால் அதனைத் தொடர்ந்து இத்தாலி ரேசிலும் ஈடுபட்டார்.

தற்போது பெல்ஜியம் கார் ரேசிலும்  ஈடுபட்டு இரண்டாவது இடத்தில் பிடித்து இருக்கிறார்
இது தொடர்பான தகவலை அஜித் குமார் ரேசிங் அணி மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக்கப்பட்டு வருகிறது

நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி தாங்கள் வென்ற கோப்பையை கையில் ஏந்தி அதனை கொண்டாட கூடிய வீடியோக்கள் தற்போது
இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் வெற்றியை கொண்டாட பல ரசிகர்கள் அந்த ரேசிங் நடைபெற்ற
இடத்திற்கு சென்று இருக்கின்றனர்

அவர்கள் அனைவரும் ஏகே ஏகே என்ற சத்தத்தை எழுப்பி அஜித்தை மேலும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்

அதுமட்டுமல்லாமல் பெல்ஜியம் ரேஸை பொறுத்தவரை கொட்டும் மழையில் நடைபெற்றது
மொத்த சார்க்யூட்டும் மழை மீறினால் காணப்பட்டது இருந்தும்.

இதில்
அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி வீரர்கள் மிகவும் சவாலான சர்க்யூட்டில் ரேஸில்   ஈடுபட்டார்கள்.

இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT