மாநாடு முடிந்த கையோடுஷூட்டிங்
Thalapathy 69 தளபதி விஜய்யின் தாவெகா மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது
சில லட்சம் ரசிகர்கள் அந்த ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு மிகப்பெரிய ஒரு
தாக்கத்தையும் நல்ல ஒரு எதிர்பார்ப்பையும் தமிழக அரசியல் வரலாற்றில்
திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய வகையில்
ஒரு நல்ல ஒரு மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
இந்த மாநாட்டில் நடிகர் விஜய் பேசிய பேச்சு பல பேரால் பாராட்டப்பட்டாலும்
ஒரு சிலரால் விமர்சிக்கப்படுகிறது.
சினிமா வசனம் போல் விஜய் அதை மனப்பாடம் செய்து பேசுகிறார் என்று
விமர்சனம் வைக்கப்பட்டாலும் இந்த மாநாடு வெற்றி மாநாடுடாகவே பார்க்கப்படுகிறது.
விஜய் அவரின் 69 ஆவது படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாரா ?
மாநாட்டிற்கு பிறகு விஜய் மிகப்பெரிய ஒரு பேசப் பொருளாக மாறி இருக்கிறார்
சினிமா பிரபலங்கள் தொடங்கி அரசியல் பிரபலங்கள் வரை தொடர்ந்து
நடிகர் விஜயின் பேச்சு குறித்து தான் விவாதித்து வருகின்றனர்.
விஜய் இந்த மாறியாக பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று பலரும் கூறி வருகின்றனர்
மாநாடு முடிந்த கையோடு தளபதி விஜய் அவருடைய 69 ஆவது திரைப்படத்திற்கான
ஹூட்டிங்கில் இணைய உள்ளார்
Thalapathy 69 Movie Shooting
நடிகர் விஜய்யின் 69 ஆவது படத்தை எச் வினோத் இயக்குகிறார் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
தளபதி 69 படத்திற்கான சூட்டிங் வருகிற நவம்பர் 4ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்த திரைப்படத்திற்கான படம் பிடிப்பு வேலைகள் எல்லாமே முடிந்து அடுத்த ஆண்டு
அக்டோபர் மாதம் ரிலீஸ் செய்யப்பட குழு முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட்டு அடுத்த கட்டப் பணிகள் நடைபெறும் அளவிற்கு குழு முடிவு செய்திருக்கிறதாம்
இந்த மாதம் ஐந்தாம் தேதி தான் படத்திற்கான பூஜை போடப்பட்ட நிலையில்
படத்திற்கான படம் படிப்பிற்காக சென்னையில் பிரமாண்ட செட் ஒன்று போடப்பட்டிருக்கிறது
பாடல் காட்சிகள் சூட்டிங் ஏற்கனவே முடிக்கப்பட்டிருக்கிறது.
பாடல் காட்சியைப் பொருத்தவரை ஐந்து நாட்கள் படம்பிடிப்பு நடத்தலாம் என்று
முடிவு செய்திருந்தார்களாம் அது நான்கு நாட்களில் நிறைவடைந்து இருக்கிறது
தன்னுடைய மாநாடு கட்சி சம்பந்தப்பட்ட வேலைகளில் விஜய் ஈடுபட்டிருந்த காரணத்தினால்
இந்த படத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்தது.
வருகிறா ஐந்தாம் தேதி முதல் இந்த படத்திற்கான அடுத்த கட்ட படம் பிடிப்பு
நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.