மாவீரன் படத்தின் முதல் பாடல் எப்படி இருக்கு
Maaveeran movie சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்த திரைப்படத்தை மண்டேலா திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார் மிஸ்கின் இந்த ஒரு திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டிருக்கின்றார்.
மாவீரன் திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த பிரின்ஸ் திரைப்படத்திற்கு
விஜயின் லியோ படபிடிப்பில் செல்போனுக்கு தடை விதித்த படக்குழு
தெலுங்கில் நல்ல வரவேற்பும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ஒரு ஓபனிங் கிடைத்திருந்தது.
மாவீரன் திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் அவருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் படம் பிடிப்பு நடைபெற்ற போது இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
ஒருவழியாக இருவரிடமும் தயாரிப்பு நிறுவனம் பேசி இருவரையும் சமாதானப்படுத்திய பிறகு படத்திற்கான படம்பிடிப்பு வேலைகள் மீண்டும் ஆரம்பமானது.
ஏற்கனவே மாவீரன் திரைப்படத்திற்காக சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டதில் சிவகார்த்திகேயனுக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
சிவகார்த்திகேயன் தற்போது ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் ஒவ்வொரு காட்சிகளையுமே அவர் கவனிப்பதாகவும் அவருக்கு திருப்தி இருந்தால் மட்டுமே அவர் ஓகே சொல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தான் தற்போது மாவீரன் திரைப்படத்திற்கான சில காட்சிகளை ரீ ஷூட் செய்ய முடிவு அந்தப் பணிகள் எல்லாம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
அதேவேளையில் மாவீரன் திரைப்படத்திற்கான முதல் பாடல் சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்பை படக்குழு அறிவித்திருக்கிறது.
இந்த மாவீரன் படத்தின் முதல் பாடல் சீன்ஆஹ் சீன் ஆஹ் என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோவை பட குழு நேற்று சிவகார்த்திகேயன் பிறந்தநாள் என்பதால் வெளியிட்டு இருந்தனர் . Maaveeran movie
முதல் பாடலை அனிருத் பாடியிருந்தாலும் இந்த பாடல் வெளிவந்து ரசிகர் மத்தியில் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணி என்றாலே பாடல்கள் பட்டைய கிளப்பும் ஆனால்
இந்த படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இல்லை என்பதுதான் ஏமாற்றக் கூடிய விஷயம்.
மாவீரன் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்டுகள் தொடர்ச்சியாக அடுத்த மாதம் வெளிவரும் என்றும் கூறப்படுகின்றது.