என்னை கடவுளே அஜித்தே என்று அழைக்க வேண்டாம்
Ajith kumar நடிகர் அஜித்குமார் என்னை கடவுளே அஜித்தே என்று அழைக்க வேண்டாம்
என்று அறிவித்திருக்கிறார்
ஆரம்பத்தில் அஜித் குமார் அவரை அல்டிமேட் ஸ்டார் அஜித் என்று அழைத்து வந்த நிலையில்
அல்டிமேட் ஸ்டார் பட்டம் எனக்கு தேவை இல்லை என்று அறிவித்தார்
அதன் பிறகு தீனா படம் மூலம் தல அஜித் என்று அழைத்திருந்தனர் தல என்ற
பட்டமும் விண்ணை முட்டும் அளவிற்கு பிரபலமாக இருந்தது
ஒரு கட்டத்தில் என்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமாக
அறிவித்திருந்தார் என்னை ஏகே என்றோ அல்லது அஜித் குமார் என்று
அழைத்தாலே போதுமானது என்றார்
ஆனால் அஜித் ரசிகர்கள் அன்பு அளவு கடந்தது என்று தான் சொல்ல வேண்டும்
அஜித் என்று அழைக்காமல் “கடவுளே அஜித்தே அஜித்தே கடவுளே” என்று அழைத்தனர்
இது தமிழ்நாடை தாண்டி வெளிநாடுகளிலும் உலக அளவில் பிரபலமானது.
அமரன் படத்தின் பிரச்சனை என்ன ?
அஜித்தே கடவுள் என்ற வாசகம் இணையத்தில் இடியாக இறங்கி விண்ணை பிளந்தது
என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு ஒவ்வொரு விழாக்களிலும் அஜித் பெயர்
உச்சரிக்காமல் எந்த விழாவும் நடைபெறவில்லை என்று கூறலாம்
அந்த அளவிற்கு கடவுளே அஜித்தே பிரபலமானது.
Ajith Kumar – கடவுளே அஜித்தே அஜித்தே கடவுளே
இந்த நிலையில் தான் பொதுமக்களுக்கும் தன்னுடைய பெயரின் நன் மதிப்பை கேடுக்கும்
வகையில் யாரும் ஈடுபடக்கூடாது என்று அன்பு கட்டளையே அஜித்குமார் அறிவித்திருக்கிறார்.
அதை அஜித்தின் மேலாளர் சுரேஷ்சந்திரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில்
பகிர்ந்து இருக்கிறார்கள் அதில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்றால்
வணக்கம் சமீப காலமாக முக்கிய நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக
தேவையில்லாமல் எழுப்பப்படும் கடவுளே அஜித்தே என்ற கோஷம்
என்னை கவலை அடைய செய்திருக்கிறது.
என்னுடைய பெயரை தவிர்த்து எந்த ஒரு முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில்
எனக்கு துணியும் உடன்பாடு இல்லை எனது பேரில் மட்டுமே என்னை அழைக்க விரும்புகிறேன்.
பொது இடங்களிலும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் அவர்களுக்கு
இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்யும் இச்செயலை நிறுத்துவதற்கு உங்கள்
ஒத்துழைப்பை நான் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்
என்னுடைய இந்த கோரிக்கைகளுக்கு உடனடியாக நீங்கள் மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்
யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள்
மற்றும் சட்டத்தை மடிக்கும் குடிமக்களாக இருங்கள்
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்
வாழ வாழ விடு அஜித் குமார் என்று அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது
சினிமாவில் தனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்ற நிலையில் தான் அல்டிமேட் ஸ்டார்
என்ற பட்டத்தை அஜித்து உபயோகிப்பதை நிறுத்திவிட்டார்
அதன் பிறகு தல என்று செல்லமாக ரசிகர்கள் அழைத்து வந்தாலும் ஒரு கட்டத்தில்
தல என்று யாரிடமும் வீண் விவாதங்கள் வேண்டாம் சண்டைகள் வேண்டாம் இனி எனக்கு
தல என்ற பட்டமே தேவை இல்லை என்று அறிவித்திருந்தார்.
அஜித்தே கடவுளே கடவுளே அஜித்தே – Ajith kumar
இந்த நிலையில் அப்படிப்பட்ட அஜித் குமார் அவரை அஜித்தே கடவுளே என்று
ரசிகர்கள் கோஷம் விண்ணை பிளக்கும் அளவுக்கு உலக அளவில் ட்ரெண்டானது
மிகுந்த ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது சமூக வலைதளங்களில்
அஜித் பெயர் உச்சரிக்காத நாட்கள் இல்லை என்று சொல்லலாம் சமீப காலங்களில்
இது எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அஜித் இவ்வளவு தெளிவான ஒரு
அறிக்கை விட்டிருப்பது பல சமூக ஆர்வலர்கள் மத்தியில் அஜித்தின் நன்மதிப்பை
மேலும் உயர்த்துகிறது என்று சொல்லலாம்
ஆனால் அஜித் ரசிகர்கள் இந்த கோஷத்தை தாண்டி வேறு ஏதும் கோஷத்தை
புதிதாக ட்ரெண்டிங் செய்வார்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது
அது மட்டும் அல்லாமல் அஜித்தின் குட் பேட் அக்லி விடாமுயற்சி திரைப்படங்கள்
அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கும் வேளையில் இந்த மாதிரி ஒரு அறிக்கை வெளியிட்டிருப்பது
அஜித்தின் அந்த கண்ணித் தன்மையை காட்டுகிறது.
Ajith kumar
சமூகப் பொறுப்பு உள்ள ஒரு நடிகராகவும் தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பு கட்டளை மூலம்
அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் நல்ல அரவணைத்துச் செல்லக்கூடிய
ஒரு அன்பான நடிகராகவும் அஜித்தை பார்க்கும் சூழல் தொடர்ந்து நிகழ்கிறது என்று சொல்லலாம்.
ஒவ்வொரு அறிக்கையிலும் தன்னுடைய ரசிகர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது
அவர்கள் குடும்பத்துடன் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதை அஜித் தொடர்ந்து
வலியுறுத்தி வருகிறார் என்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயமாக அமைந்திருக்கிறது.