வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு
pushpa 2 வருத்தம் தெரிவித்த அல்லு அர்ஜுன் 25 லட்சம் நிவாரண உதவி அறிவிப்பு
நடிகர் அல்லு அர்ஜுன் ராஜ் மிக மந்தனா இவருடைய நடிப்பில் திரையரங்கில்
மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பு வெளியான திரைப்படம் புஷ்பா 2
இந்த படத்தின் பிரீமியர் ஷோ நடைபெற்ற தினத்தில் ஹைதராபாத்தில் உள்ள பிரபல
திரையரங்கம் ஒன்றில் படத்தை பார்க்க குடும்பத்துடன் வந்த ரேவதி என்பவர் கூட்ட
நெரிசலில் சிக்கி உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
pushpa 2 Movie – ரசிகர் ஷோ
இந்த ஒரு ரசிகர் பிரீமியர் ஷோ ரசிகர்களுடன் பார்க்க அல்லு அர்ஜுன் மற்றும்
ராஜ் மிக மந்தனா வந்த நிலையில் தான் படத்தை பார்ப்பதை காட்டிலும்
இவர்களை பார்க்கவே கூட்டம் அலைமோதியது என்று தான் சொல்ல வேண்டும்.
இதனை எடுத்து ஏற்பட்ட கூட்ட நெர்சரி சிக்கி ரேவதி என்பவர் உயிரிழந்துள்ளார்
இதில் படுகாயம் அடைந்த அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாலத்தீவில் மாடர்ன் போட்டா வேதிகா
இந்நிலையில் இது குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது தன்னுடைய
வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்து சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில்
நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இருந்தாலும் இந்த படம் முன்பு வெளியான
புஷ்பா திரைப்படம் இல்லை என்ற விமர்சனம் ஒரு புறம் இருந்து வந்தாலும்.
படத்தின் முதல் நாள் வசூல் என்பது 294 கோடி ரூபாயாக இருப்பதாக
தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது
இந்த வார இறுதியில் கண்டிப்பாக புஷ்பா 2 திரைப்படம் 500 கோடி ரூபாய்
வசூலை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
அதைப்போல் இந்த ரசிகர் ஷோ இரவு 10:30 மணி அளவில் திரையரங்கில் திரையிட்டு இருக்கின்றன அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக நாகர் அல்லு அர்ஜுன் மற்றும்
ராஜ் மிக மந்தனா இவர்களை பார்க்கவே அதிக கூட்டம் திரண்டு இருந்ததனால்
கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி இருக்கின்றனர்.
இதனை அடுத்து அவர்கள் நடத்திய தடியடி இதில் ஓடிய ரசிகர்கள் பல பக்கங்களில்
ஓடியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது இதில் குடும்பத்துடன் படம் பார்க்க வந்த
35 வயது மதிக்கத்தக்க ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீ தேஜா
இருவரும் கூட்ட நெரிசல் தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
அப்போது இவர்கள் மீது மற்றவர்கள் ஏறி ஓடியதாக தெரிகிறது இதையடுத்து மூச்சு திணரி
சுய நினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனார்
ஆனால் ரேவதி மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பாக
இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
அதேபோல் அவரது மகன் ஆபத்தான நிலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகிறார்
pushpa 2 – Allu Arjun condolence – வருத்தம்
அல்லு அர்ஜுன் வருத்தம் புஷ்பா 2 திரைப்படம் வெளியான திரையரங்குகளில்
கூட்ட நெரிசலில் மேலும் சிலர் காயம் அடைந்துள்ள நிலையில் இந்த சம்பவம்
மிகப்பெரிய ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து படக்குழுவினர் மௌனம் சாதித்து வந்த நிலையில் தான்
தற்போது அல்லு அர்ஜுன் இது சம்பந்தப்பட்டு இது குறித்து பேசி உள்ளார்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அந்த குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும்
அவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும்
இதனால் படத்தில் கொண்டாட்டங்களில் நாங்கள் பங்கேற்க முடியவில்லை என்றும்
அவர் தெரிவித்துள்ளார் ரேவதியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த
அனுதாபத்தை தெரிவித்திருக்கிறார்.
நிவாரணம் அறிவிப்பு பாதிக்கப்பட்ட ரேவதியின் குடும்பத்தினருக்கு தன்னுடைய சார்பில்
25 லட்ச ரூபாய் வழங்குவதாக அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்
மேலும் புஷ்பா 2 படக்குழுவினருடன் இருந்து ரேவதியின் குடும்பத்தினருக்கு
எந்த உதவியும் செய்ய தயாராக உள்ளதாகவும் அல்லு அர்ஜுன் கூறியுள்ளார்
இந்த நேரத்தில் அவர்கள் வலியை உணர்ந்து உள்ளதாகவும் விரைவில்
அவர்களை சந்திக்க உள்ளதாகவும் நடிகர் அல்லு அர்ஜுன் கூறியிருக்கிறார்.