தமிழ் சினிமா

24H என்ற கார் ரேஸில் அஜித்குமார்

Ajith kumar தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரக் கூடியவர் நடிகர் அஜித் குமார்

இவர் நடிப்பில் உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படத்திற்கான படம் பிடிப்பு எல்லாம் முடித்துவிட்டு
தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்த வருகிறான்

குட் பேட் அக்லியில் ஜிவி பிரகாஷ்

இதனுடைய இடைவேளையில் தற்போது அஜித் குமார் கார் ரேஸில் ஈடுபட போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்
அது சம்பந்தப்பட்ட பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்தது

15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸ் களத்தில் குதித்து இருக்கிறார் நடிகர் அஜித்குமார்
இதற்காக விலை உயர்ந்த பல மாடல் கார்களை வாங்கி ரேசில் ஈடுபடுவதற்கு தகுந்தது போல்
அந்த காரின் அமைப்பை மாற்றி அமைத்து வருகிறார்.

ADVERTISEMENT

Ajith kumar – அஜித் குமார் கார் ரேஸ்

அதில் இந்தியாவின் தேசியக் கொடி இடம் பெற்றிருக்கிறது குறிப்பாக தமிழ்நாட்டின் விளையாட்டின் அங்கீகாரமாக வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய லோகோவும் அந்த காரில் அதுக்கப்புறம் அஜித் அவர்கள்
அணியக்கூடிய ஹெல்மெட்டில் இடம் பிடித்திருக்கிறது குறிப்பிடத்தக்கது 

துபாயில் நடைபெற உள்ள 24H என்ற கார் ரேஸில்  அஜித்குமார் மற்றும் அவரது அணிகள் பங்கேற்க இருக்கின்றனர் 

 அஜித் குமார் கார் ரேசிங் என்ற பெயரில்  தனது அணியுடன்  அஜித் குமார் இருக்கக் கூடிய புகைப்படங்கள் வெளியாகிய
ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும் வீடியோவும் வெளியாகியிருக்கிறது இதில் எல்லாவற்றிற்கும் ரசிகர் மத்தியில்
மிகுந்த வரவேற்பும் ஆதரவு கிடைத்திருக்கிறது.

Ajith kumar 24H கார் ரேஸ்

துபாயில் நடைபெறக்கூடிய இந்த கார் ரேஸில் அஜித் அணியும் அஜித் அவரும் வெற்றி பெறும் பட்சத்தில்
தமிழ்நாட்டு பெருமையை துபாய் அளவிற்கு எடுத்துச் சென்ற முதல் நடிகராகவும்
இந்தியராகவும் அஜித் இருப்பார் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை 

அஜித் அவர்கள் கார் ரேசில் கலந்து கொள்வதற்காக போர்சே கார் தற்போது தயார் படுத்தப்பட்டிருக்கிறது
அஜித் அவருடைய அணியும் அந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் 
சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகிறது 

ADVERTISEMENT

அஜித் அவர்களின் காரில் இந்திய தேசியக்கொடி ஏகே என்ற முத்திரை உடைய பெயர் அஜித் கார் ரேஸ் என்ற பெயர்
தமிழ்நாடு விளையாட்டு கழகத்தின் லோகோ உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றது

அஜித்தின் விடாமுயற்சி குட் பேட் அட்லி உள்ளிட்ட திரைப் படங்கள் எப்போது வெளியாகும் என்று
ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கக்கூடிய வேளையில் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது
அவர்களை சற்று ஆறுதல் அடைய வைத்திருக்கிறது என்று சொல்லலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT